அடக்கொடுமையே.. புரமோஷன் நிகழ்ச்சிக்கு அந்த நடிகை போகாமல் இருக்க இப்படியொரு கசப்பான அனுபவம் இருக்கா?

By Staff

சென்னை: நம்பர் நடிகை சினிமா புரமோஷன்களை ஒரேயடியாக தவிர்க்க காரணமே ஏகப்பட்ட பாதிப்புகளை அவர் சந்தித்தது தான் என்கின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக கலந்து கொண்டு வந்த அந்த நடிகை காதலிக்க ஆரம்பித்து திருமண வாழ்க்கையில் ஈடுபட நினைத்த நிலையில், தான் அதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.

புதிய படங்களின் புரமோஷனுக்காக பல வெளிநாடுகளுக்கும் நடிகை தனியாக செல்லவேண்டிய நிலையில், ஏகப்பட்ட தனிப்பட்ட சிக்கல்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் தான் கொஞ்சம் இடம் கொடுத்தாலும் ரொம்ப மிஞ்சிடுவாங்க என்பதால் ஒட்டுமொத்தமாக அந்த விஷயத்துக்கே நோ சொல்லி வருகிறார் நம்பர் நடிகை என்கிற அதிர்ச்சி குண்டை சினிமா வட்டாரத்தில் சிலர் போட்டுள்ளனர்.

Popular actress avoids promotional event due to night party issues?

வெறும் புரமோஷன் மட்டும் நடக்காது என்றும் அதன் பின்னர் நடக்கும் இரவு பார்ட்டியிலும் கலந்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் காரணமாகவே நடிகை அதிலிருந்து ஒதுங்கி விட்டார் என்கின்றனர்.

இந்த பட புரமோஷனுக்கும் வரவில்லை: பெரிய நடிகருடன் இணைந்து நடித்துள்ள நிலையில், கண்டிப்பாக நம்பர் நடிகை இந்த புரமோஷனுக்காவது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நோ மீன்ஸ் நோ என்பது போல இந்த படத்தின் புரமோஷனுக்கும் வரவே முடியாது என கறாராக சொல்லி விட்டாராம் நடிகை.

ஆரம்பத்திலேயே தனது முதல் கண்டிஷனாகவே புரமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை குறிப்பிட்டு விடுகிறாராம். சினிமாவில் நடிப்பது மட்டும் தான் தனது வேலை என்றும் அதற்கு பிறகு அந்த படத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதில் தெளிவாக இருந்து வருகிறாராம்.

நடிகர் அப்செட்: அந்த நடிகரே தனது ஸ்டேட்டை விட்டு இங்கே படத்டை புரமோட் செய்ய வந்த நிலையில், நடிகை வருவார் என எதிர்பார்த்த நடிகருக்கு நடிகையின் தீவிர முடிவால் ரொம்பவே மனக்கஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறுகின்றனர்.

தனது படத்தை பெரிதாக புரமோட் செய்யலாம் என நினைத்து இங்கே வந்தால், யாருமே தனக்காக வரவில்லையே என்பதால் நடிகர் சற்றே கடுப்பில் உள்ளதாக கூறுகின்றனர்.

கசப்பான அனுபவங்கள்: ஆரம்ப காலத்தில் நடிகை பல படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற போதெல்லாம் புரமோஷன் நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு நேரங்களில் பிரைவேட் பார்ட்டியிலும் கலந்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்திய கசப்பான அனுபவங்கள் தான் தற்போது இப்படி அந்த நடிகை அனைத்தையும் தவிர்க்க காரணமே என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X