அசிங்கப்பட்டதே போதும்.. இனிமே அந்த ஸ்பீடு இயக்குநர் படத்தில் நடிக்கவே மாட்டேன்.. பிரபல நடிகை முடிவு?

By Staff

சென்னை: ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல சதா காலம் அருவாவை தூக்கிக் கொண்டே படங்களை எடுத்து வந்த இயக்குநருக்கு சுத்தமாக அறிவு மழுங்கி போய் விட்டதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத அந்த நடிகைக்கு அந்த இயக்குநர் வரிசையாக தனது படங்களில் நடிக்க வைத்து வரும் நிலையில், நடிகைக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால் தற்போது அந்த இயக்குநரை தலைமுழுக முடிவு செய்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கடைசியாக பிரபல நடிகை அந்த இயக்குநர் படத்தில் டபுள் ஆக்‌ஷனில் வேறு நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த பலரும் படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்து வரும் நிலையில், நடிகை ரொம்பவே கடுப்பாகி விட்டாராம்.

Popular actress avoids the Speed Director due to continous flops

புரமோஷன்களுக்கே நடிகை வராமல் போக காரணமே இயக்குநருடனான பிரச்சனை தான் காரணம் என்கின்றனர். இந்நிலையில், இன்னொரு படத்துக்கும் நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் நினைத்த நிலையில், இன்னமும் நடிகையை ரீச் பண்ண முடியவில்லையாம்.

சின்னத்திரை டு வெள்ளித்திரை: சீரியலில் இருந்து சினிமாவுக்கு பல நடிகைகள் வரிசையாக வந்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களில் யாருமே பெரிதாக ஷைன் ஆகவில்லை. அந்த நிலையையும் மாற்றி டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் அந்த பிரபல நடிகை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை நடிக்கும் அத்தனை படங்களும் சொல்லி வைத்தது போல தோல்வியை தழுவி வருவதால் நடிகை மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

ஸ்பீடு இயக்குநர்: கதை மற்றும் திரைக்கதை என புதுசாகவே எதுவும் இல்லாத நிலையிலும், படங்களை இயக்கியே தீருவேன் என ஓவர் சீன் போட்டு வந்த அந்த ஸ்பீடு இயக்குநர் சமீபத்தில் ஹைட் நடிகரை வைத்து இயக்கிய அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. ஓடிடியில் வெளியான அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஓட்டி வருகின்றனர்.

எஸ்கேப்பாகும் நடிகை: இந்த படத்திலேயே அந்த நடிகையை எந்தளவுக்கு படாத பாடு படுத்த முடியுமோ அந்தளவுக்கு படுத்தி விட்டாராம் அந்த இயக்குநர். இந்நிலையில், அடுத்து அவர் சீக்கிரமே இயக்கவுள்ள படத்திலும் இந்த நடிகையை புக் செய்து விடலாம் என நினைத்து அவரையும் அவரது மேனேஜரையும் தொடர்பு கொள்ள நினைத்தால் பிடிக்கவே முடியவில்லையாம். இயக்குநரிடம் நடிகையின் மேனேஜர் நாசுக்காக வேறு நடிகையை பார்த்துக் கொள்ளுங்கள் என்றே சொல்லி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X