நம்பர் நடிகைகளை டோட்டலாக அவாய்ட் பண்ண மில்க் பியூட்டி.. ஓஹோ அந்த காண்டு தான் காரணமா?

By Staff

சென்னை: சமீபத்தில் புதிய தொழிலை தொடங்கிய மில்க் பியூட்டி நம்பர் நடிகைகளை மட்டும் ஏன் அழைக்காமல் டோட்டலாக அவாய்ட் பண்ணிவிட்டார் என்கிற கேள்வி கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது முன் பகை தான் காரணம் என்றும் அதனால் தான் மில்க் பியூட்டி அந்த ரெண்டு நம்பர் நடிகைகளையும் அழைக்கவில்லை என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் மில்க் பியூட்டி அறிமுகமான புதிதில் அவருக்கு எதிராக இந்த இரண்டு நம்பர் நடிகைகளின் ஐடி விங்கும் ஏகப்பட்ட சூழ்ச்சிகளை செய்து கோலிவுட்டில் இருந்தே நடிகையை துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

Popular Actress avoids to invite few top actress due to some old ego clash

தனக்கு பெரிய நடிகர்களுடன் இணைந்து பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைக்காமல் போனதற்கு காரணமே அந்த நடிகைகள் தான் என்கிற விஷ விதை விதைக்கப்பட்டது தான் அந்த நடிகைகளுடன் இணைந்து பணியாற்றாமலும் நட்பு வட்டாரத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் என்கின்றனர்.

நடிகைகளுக்குள் ஈகோ கிளாஷ்: புதுசா ஒரு நடிகை வந்தாலே அவருக்குத் தான் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நடிகைகளை தேடியே ஹீரோக்கள் ஓடுவார்கள் என்பது காலம் காலமாக நடக்கிற சினி கூத்து தான். மில்க் பியூட்டி அறிமுகம் ஆன புதிதும் அவருக்கு அப்படி ஏகப்பட்ட ஜாக்பாட் அடித்தது. ஆனால், அவரால் தொடர்ந்து ஒரு இண்டஸ்ட்ரியில் நீடித்து நிற்கவோ முதல் இடத்தை பிடிக்கவோ முடியாமல் போய்விட்டது. நடிகைகளின் ஈகோ கிளாஷ் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அவாய்ட் பண்ணாங்க: பல சமயங்களில் நம்பர் நடிகைகள் மில்க் பியூட்டியை ஆரம்ப காலக்கட்டத்தில் ரொம்பவே அவாய்ட் பண்ணியுள்ளனர் என்றும் அதனால் தான் அவருக்கு அவர்களை பிடிக்கவே இல்லை என்றும் கூறுகின்றனர். தனக்கு நெருக்கமாக இருக்கும் நடிகைகளை தேடி ஓடிச் சென்று அழைத்து நிகழ்ச்சிக்கு வரவழைத்தார் என்றும் இவர்களை அவர் ஒரு பொருட்டாகவே கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.

கூப்பிட்டாலும் வரமாட்டாங்க: நம்பர் நடிகைகளுக்கும் மில்க் பியூட்டி என்றாலே அலர்ஜி தானாம். வைபே ஆரம்பத்தில் இருந்து செட்டாகவில்லையாம். ஒரு படத்தில் இணைந்து நடித்த போது கூட ஓவர் ஈகோ கிளாஷ் ஆனதாக கூறப்படுகிறது. மில்க் பியூட்டி ஒருவேளை நேரில் சென்று அழைப்பு விடுத்து இருந்தால் கூட அவங்க ரெண்டு பேரும் பிஸின்னு சொல்லி அவாய்ட் பண்ணியிருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X