பார்ட்னரை கழட்டி விட்டு பாய் பிரண்ட் உடன் டேட்டிங் சென்ற நடிகை.. குழந்தையை கண்டுக்கிறதே இல்லையாம்!
சென்னை: பிரபல நடிகை கோலிவுட்டில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்து வந்த நிலையில், வசதியான தொழிலதிபரை பார்ட்னராக மாற்றிக் கொண்டு செட்டில் ஆகி விட்டார்.
அவருடன் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இந்நிலையில், புதிய பாய் பிரண்ட் உடன் உல்லாசமாக டேட்டிங் செய்து வருகிறார் அந்த நடிகை என்றும் மேலும், ஏகப்பட்ட கிசுகிசுக்களும் அந்த நடிகையை பற்றி பரவி வருகின்றன.

பெரிய புகழ்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த நடிகை முதல் படத்திலேயே செம ஸ்கோர் செய்த நிலையில், தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என நடித்து அசத்த தொடங்கிய அவருக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்த நிலையில், அத்தனையை விட்டு விட்டு திடீரென செட்டில் ஆகி விட்டார்.

பணக்கார பையன்
சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பாதித்தது வரை போதும், நல்லா செட்டில் ஆக வேண்டும் என நினைத்த அவர், தன் பின்னால் ஜொள்ளு விட்டுத் திரிந்த பணக்கார பையனை வளைத்துப் போட்டு திருமணம் செய்து கொள்ளாமல் பார்ட்னர் ஆக்கிக் கொண்டார்.

குழந்தையும் பிறந்தது
பார்ட்னரை திருமணம் செய்து கொள்ளாமலே அவருடன் இணைந்து குழந்தை ஒன்றையும் பெற்றுக் கொண்டார் அந்த நடிகை. குழந்தையை பராமரிப்பதிலேயே காலத்தை செலவழித்த நிலையில், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி இருந்தார். ஆனால், குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க களமிறங்கிய நிலையில், பார்ட்னர் உடன் பஞ்சாயத்து ஏற்பட்டது.

பார்ட்னரை பிரிந்து
இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்த நிலையில், பார்ட்னரை பிரிந்து தனியாக குழந்தையுடன் நடிகை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அம்மாவிடம் குழந்தையை கொடுத்து விட்டு நடிக்க கிளம்பிய நடிகை இன்னொரு பாய் பிரண்டை தேடிக் கொண்டது தான் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

பாய் பிரண்ட்
பார்ட்னரை கழட்டி விட்ட நிலையில், தற்போது இன்னொரு வசதியான வீட்டுப் பிள்ளையை பாய் பிரண்டாக நடிகை ஆக்கிக் கொண்டாராம். அவருடன் உல்லாச டேட்டிங்கிற்கும் சென்று வந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தனது குழந்தையை இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை என்றும் நடிப்பிற்கான வாய்ப்பை அவர் ஏற்படுத்தித் தருகிறேன் என சொல்லி இருப்பதால் அவருடன் சேர்ந்து சுற்றி வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











