எப்படியாவது முதலிடத்தை பிடிக்கணும்.. அந்த நடிகையை தலை தெறிக்க ஓட விடணும்.. நம்பர் நடிகை உறுதி!

By Staff

சென்னை: தன்னுடைய இடத்தை சில ஆண்டுகாலமாக காணாமல் போயிருந்த அந்த சீனியர் நடிகை பிடித்து விட்டாரே என நம்பர் நடிகைக்கு ரொம்பவே கோபம் வந்துவிட்டதாம். தான் ஆரம்பத்தில் இருந்து எதை செய்து இந்த இடத்தை பிடித்தோம் என்பதை ஒரு நிமிடம் நிதானமாக சிந்தித்துப் பார்த்த நடிகைக்கு அந்த கோபம் காணாமல் போக, வைராக்கியம் வந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

காதல் மோகத்தால் சில ஆண்டுகளாக தனது இடத்தை நடிகை மற்ற நடிகைகளுக்கு தாராளமாக தாரை வார்த்துக் கொடுத்து விட்டார் என்றும் எதிலும் சின்சியராக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் நம்மை மீண்டும் ஓவர்டேக் செய்துக் கொண்டு அந்த சீனியர் நடிகை முதலிடத்தை பிடித்தது எப்படி என்பதை தீவிரமாக ஆலோசித்த நடிகை தனக்குள் சில மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

Popular Actress changed many things in her attitude at the shooting spot to regain her positition

ஓவர் சீன் எல்லாம் போட்டால், இந்த இண்டஸ்ட்ரியில் இருந்து ஒரு கட்டத்திற்குள் மேல் நம்மை கட்டம் கட்டி தூக்கி விடுவார்கள் என்பதை புரிந்துக் கொண்ட நடிகை தற்போது நடந்துக் கொள்ளும் விதமே வேறமாதிரி இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பெரிய படம் கிடைச்சிருக்கு: சோலோ ஹீரோயினாக நடிகைக்கு சில கோடிகளில் சுமாரான படங்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், பல கோடி முதலீட்டில் தன்னை முழுமையாக தயாரிப்பாளரும் இயக்குநரும் நம்பி இந்த படத்தை கொடுத்திருக்கும் நிலையில், இதை எப்படியாவது பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கிவிட்டாலே தான் நினைத்தது அனைத்தும் சாத்தியமாகி விடும் என்பதை புரிந்துக் கொண்ட நடிகை செட்டில் கடந்த சில ஆண்டுகளாக இருந்தது போல் இல்லாமல், ரொம்பவே சின்சியராகவும் படத்தின் முன்னேற்றத்தின் மீது சீரியஸ் காட்டியும் வருகிறார் என்கின்றனர்.

மனசு முழுவதும் வைராக்கியம்: தன்னை உதறித்தள்ளிய முன்னணி நடிகர்களுக்கும், கணவரை கழட்டிவிட்ட நடிகர்களுக்கு மத்தியில் மீண்டும் தான் யார் என்றும் தனது பவர் என்ன என்பதையும் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மனசு முழுவதும் வைரக்கியத்துடன் சின்னதொரு புகார் கூட தன்மீது இனிமேல் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் நடிகை. இந்த திடீர் மாற்றத்தை பார்த்து ஷூட்டிங்கில் இருப்பவர்களுக்கே பெரிய ஆச்சர்யமாக உள்ளது என கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X