ஒவ்வொரு லிப் கிஸ்ஸுக்கும் இத்தனை லட்சமா?.. அந்த நடிகைக்கு இப்படித்தான் பட வாய்ப்பு கிடைக்குதா?
சென்னை: மலையாளத்தில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி ஆகியுள்ள அந்த இளம் நடிகையை போல தோற்றமளிக்கும் நடிகைக்கு திடீரென பல பட வாய்ப்புகள் குவிய காரணமே அவர் முத்தக் காட்சிகளில் நடிக்க எந்தவொரு தடையும் சொல்லாமல் எக்ஸ்ட்ரா பேமேண்ட் மட்டும் கேட்டு வாங்கி வருவதால் தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக நடிகையை படங்களில் புக் செய்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
இந்திய திரைப்படங்களில் சென்சார் உள்ள நிலையில், தான் இங்கே உள்ள இயக்குநர்களும் நடிகர்களும் அதிகப்படியான நிர்வாணக் காட்சிகளில் எல்லாம் நடிக்காமல் அடக்க ஒடுக்கமாக நடித்து வருகின்றனர்.

அப்படி மட்டும் இல்லையென்றால் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவுக்கு நிர்வாணமாக ஆடைகளை துறந்து நடிக்க இங்கே உள்ள நடிகைகளும் எப்பவுமே ரெடியாகத்தான் இருக்கிறார்களாம். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பது போல, சென்சாரில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சில பெரிய படங்களில் யு/ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு லிப் லாக் முத்தக் காட்சிகளையும் இயக்குநர்கள் நைஸாக சொருகி விடுகின்றனர்.
ஆபாசமில்லாத முத்தக்காட்சியாம்: உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சியை எடுப்பதே இளைஞர்கள் மத்தியில் காம உணர்ச்சியை தூண்டி படம் கமர்ஷியலாக கல்லா கட்ட வேண்டும் என்பதற்குத்தான். அப்படி இல்லையென்றால் படங்களில் முத்தக் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் தேவையில்லாத ஆணி தான். ஆனால், அந்த கதைக்கு இதுதான் ரொம்ப தேவை என்றும் இப்படியொரு சீன் இல்லை என்றால் மொத்த படமும் படுத்துவிடும் என இயக்குநர்கள் கதைவிடுவதை கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், ஆபாசமில்லாத முத்தக்காட்சி என உதட்டு முத்தக் காட்சிகள் குறித்து உருட்டுவதை தான் ஜீரணிக்கவே முடியவில்லை என சென்சார் போர்டில் உள்ளவர்களே புலம்பி வருகின்றனர்.
எக்ஸ்ட்ரா 5 லட்சம்: நடிகைகள் கவர்ச்சியாக உடையணியவும் குத்தாட்டம் ஆடவும் கூட கூடுதல் தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்களாம். முத்தக் காட்சிகளில் நடிக்க அந்த மலையாள நடிகை எக்ஸ்ட்ரா 5 லட்சம் வாங்குகிறாராம். லிப் கிஸ் அடிக்கும் நேரத்திற்கும் எத்தனை லிப் கிஸ் என்கிற கணக்குக்கும் தனியாக ஆள் வைத்து கணக்குப் போட்டு சம்பளத்தை வாங்கி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
இளைஞர்களை ஈர்க்கும்: அந்த மலையாள நடிகையின் நெருக்கமான காட்சிகளே விரைவில் வெளியாகும் அந்த ஒல்லி நடிகரின் படத்தை ஓட வைத்து விடும் என பேசிக் கொள்கின்றனர். ஏற்கனவே பக்கத்து ஸ்டேட்டில் ஒரு இளம் நடிகரின் படத்தையும் நடிகையின் லிப் லாக் முத்தக் காட்சி தான் பெருமளவில் ஓடவைத்தது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











