கல்யாண விழாவில் நைட் நடந்த கசமுசா.. கணவரை கழட்டி விட்டு அந்த நடிகர் அறைக்கு சென்ற ஹீரோயின்?

By Staff

மும்பை: பெரும் பொருட்செலவில் நடைபெற்று வரும் திருமண விழாவில் இரவு நேரத்தில் வித விதமான சரக்கு பார்ட்டிகளும் அரங்கேறியதாக கூறுகின்றனர். மேலும், ஒவ்வொரு பிரபலத்துக்கும் தனித்தனியாக தங்கும் விடுதிகள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை விட வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம். சில இளம் நடிகைகள் தங்கள் பாய் ஃபிரெண்ட் உடனே நிகழ்ச்சிக்கு வந்து குடித்து விட்டு கும்மாளம் போட்டுள்ளனர்.

இரவு முழுக்க பிரபலங்கள் ஒருவருடன் ஒருவர் நட்பாக பேசியும் பழகியும் வருகின்றனர். ஏதோ அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்றது போல ஏகப்பட்ட அரட்டைகளும், அதையும் தாண்டிய விஷயங்களும் சில பிசினஸ் மற்றும் புதிய படங்களுக்கான அக்ரிமென்ட்டுகள் என பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.

Popular actress cheated her husband at wedding bash

இந்நிலையில், திருமணமான ஹீரோயின் ஒருவர் பிரபல நடிகரின் அறைக்கு தனது கணவரை கழட்டி விட்டுச் சென்று ஒரு இரவு முழுவதும் தங்கியிருந்ததாக ஷாக்கிங் தகவல்களும் கசிந்துள்ளன.

பல கோடி செலவு: அந்த தொழிலதிபர் அழைத்ததும் படப்பிடிப்புகளையும் விளம்பர ஷூட்டிங்குகளையும் விட்டு விட்டு கால்ஷீட் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக ரத்து செய்திருக்கின்றனர். அதற்கு காரணம் அத்தனை நாட்கள் அந்த நடிகர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அதை விட அதிகமாகவே தொகை கொடுத்து நடிகர்களை புக் செய்திருக்கிறாராம் அந்த தொழிலதிபர் என்கின்றனர். நட்பின் பெயரிலோ அல்லது அன்பின் பெயரிலோ நடிகர்கள் யாரும் வரவில்லை என்கின்றனர்.

பாய் ஃபிரெண்டுடன் ஜாலி: அந்த பிரபல வாரிசு நடிகை தனது ஆண் நண்பரை அந்த விழாவுக்கே அழைத்துச் சென்று தனக்கென தனி அறையை புக் செய்துக் கொண்டார் என்றும் அப்பா மற்றும் தங்கை வேறு ஒரு அறையில் தான் தங்கினார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கணவரை கழட்டி விட்டு: எல்லாவற்றுக்கும் மேலாக பிரபல நடிகை கணவருடன் அந்த நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், நள்ளிரவுக்கு மேல் கணவருடன் இல்லாமல் பிரபல பாலிவுட் ஹீரோவின் தனி அறைக்குச் சென்று விட்டதாகவும் இரவு முழுக்க அங்கே தான் இருந்தார் என்றும் காலையில் தான் மீண்டும் தனது அறைக்கு வந்ததாக அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் புகையத் தொடங்கி உள்ளன. நடிகை செய்த செயலால் கணவர் பயங்கர கடுப்பில் இருக்கிறார் என்றும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X