இந்த படமும் ஊத்திக்கிச்சு.. ஓரமாய் உட்கார்ந்து அழுது புலம்பும் ஜில் நடிகை.. என்ன பண்ணப் போறாரோ?

By Staff

சென்னை: முன்னணி நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் அளவுக்கு உமன் சென்ட்ரிக் படங்களாக நடித்துத் தள்ளி வரும் அந்த ஜில் நடிகையின் புதிய படமும் எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் புக்காத நிலையில், கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

எப்படியாவது டாப் ஹீரோயினாக வேண்டும் என்பதற்காக தொடர்ந்து படங்களில் கஷ்டப்பட்டு நடித்து வந்தாலும், கடைசியில் அவுட் புட் புஷ் என ஆகி விடுவதால் நடிகை அழுது புலம்பவே ஆரம்பித்து விட்டாராம்.

ஹீரோக்கள் எல்லாம் தன்னை ஜோடியாக போடுவதை தவிர்த்து வரும் நிலையில், கதையின் நாயகியாக மாறி உள்ள அந்த நடிகையின் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், அவரது மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது என்கின்றனர்.

Popular actress cried over her latest movie also didnt receive any response from fans

எந்த பயனும் இல்லை: சினிமாவில் நல்லா நடிக்கத் தெரிந்தால் போதும் முன்னணி நடிகையாகி விடலாம் என்கிற லாஜிக் எல்லாம் நடக்கவே நடக்காது. பெரிய நடிகர்கள் படங்களில் நடித்து ஃபிளாப் ஆனாலும், பரவாயில்லை அந்த கால் அழகிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிவது போல திறமையான மற்ற நடிகைகளுக்கு பட வாய்ப்புகளே கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பெரிதாக எழுந்தாலும் இண்டஸ்ட்ரியிலேயே அதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

அப்படித்தான் சமீப காலமாக அந்த ஜில் நடிகையை பல டாப் ஹீரோக்கள் துரத்தி அடித்துள்ளனர். ஆனால், அதற்கெல்லாம் கவலைபப்ட போவதில்லை என நினைத்த நடிகை மினி பட்ஜெட் படங்களில் கிடைக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு லீடு ரோலில் தனக்கு தெரிந்த அத்தனை நடிப்பையும் கொட்டி வருகிறார்.

தொடர் தோல்வியால் விரக்தி: சர்ச்சையை கிளப்பும் கதைகளில் நடித்தால் படம் பெரியளவில் வெற்றியை பெறும் தானும் டாப் நடிகையாக மாறி விடுவோம் என்கிற தவறான கணிப்பில் அந்த நடிகையும் தொடர்ந்து பல சர்ச்சை கதைகளை தேடித் தேடி தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Popular actress cried over her latest movie also didnt receive any response from fans

ஆனால், ஒரு படமும் ஓடாமல் நடிகையை மொத்தமாக வைத்து செய்து விட அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகிறாராம் அந்த ஜில் நடிகை.

அழுது புலம்பிய நடிகை: கடைசியாக இந்த படமாவது தனக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும் என எதிர்பார்த்த நடிகைக்கு படத்தை பார்க்க விமர்சகர்களை தவிர வேறு யாருமே வராததை அறிந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து அழவே ஆரம்பித்து விட்டாராம்.

இப்படியே போனால் தனது சினிமா கரியர் ஸ்பாயில் ஆகி விடுமே எப்படியாவது இனி பிரபலமான ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் பெரிய நடிகர்கள் படங்களில் செகண்ட் ஹீரோயின் சான்ஸ் கொடுத்தாலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அந்த நடிகை என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X