எல்லாமே அந்த நடிகையின் சாபம் தானாம்.. ஒல்லி நடிகருக்கு இப்போ ஏழரை ஸ்டார்ட்டாம்.. ரிவீட்டும் இருக்கு?
சென்னை: இந்த ஆண்டு ஒல்லி நடிகர் தொட்டது எல்லாம் பொன்னாகாமல் வீணாகி போக காரணமே நம்பர் நடிகை விட்ட சாபம் தான் காரணம் என்கின்றனர். தன்னை காலி செய்ய நினைத்த இரு நடிகர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் வகையில் ஏகப்பட்ட சாபங்களை அள்ளி வீசி விட்டார் என கோடம்பாக்கத்தில் புது பூகம்பமே கிளம்பியிருக்கிறது.
நம்பர் நடிகை மட்டுமின்றி ஒல்லி நடிகர் பற்றி வரிசையாக மனக்கசப்புகளை அள்ளி வீசி வரும் ஏகப்பட்ட நடிகைகள் மற்றும் சில நடிகைகளின் குடும்பங்கள் என பலரும் தொடர்ந்து தூற்றி வரும் நிலையில், தான் லக்கி நடிகையை போட்ட படத்திலும் ஒல்லி நடிகருக்கு லக் இல்லாமல் போய் விட்டதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே ஸ்டார் ஹீரோ நடித்த அந்த பெக்கர் படமே படுத்துக் கொண்ட நிலையில், இந்த படத்தை பார்க்கவே ரசிகர்கள் மத்தியிலேயே ஆர்வம் இல்லாமல் போக காரணமே நடிகையின் பிடி சாபம் தான் என்கின்றனர்.
நடிகையை ஓரங்கட்டியாச்சு: கோலிவுட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த நம்பர் நடிகையை ஓரங்கட்டியதே ஒல்லி நடிகர் தான் என்கின்றனர். மேலும், திடீரென பார்ட்டி குயினுக்கு பட வாய்ப்புகளாக குவியவும் இவர் தான் ஏகப்பட்ட சிபாரிசுகளை சைலன்ட்டாக செய்தார் என்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடிகையின் முதல் இடம் பறிபோகவும் அவரது பட்டத்திலும் ஒல்லி நடிகரின் உறவு எட்டிப் பார்ப்பதால் அதையும் வேண்டாம் என தூக்கிப் போடவும் இவர் தான் காரணம் என காதை கடிக்கின்றனர்.
பிடி சாபம்: நம்பர் நடிகை மற்றும் அவரது கணவர் இருவரும் ஓஹோன்னு முன்னுக்கு வர பல திட்டங்களை வகுத்து முயற்சிகளை செய்து வந்த நிலையில், அனைத்துக்கும் ஒல்லி நடிகர் விபூதி அடித்து விட, திடீரென அடுத்தடுத்து கோயில் கோயிலாக சென்று பல பூஜைகளை செய்து வந்த நடிகை வேண்டிக் கொண்டது எல்லாம் தனக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்பதை தாண்டி இந்த நடிகர் ஓட்டாண்டியாக மாற வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டார் என்றும் போனிலும், நேரிலும் நடந்த வாக்குவாதத்திலும் நடிகை பிடி சாபம் என பல வார்த்தைகளை அள்ளி விட்டு விட்டார் என்றும் நடிகையின் வயித்தெரிச்சல் தான் தொடர்ந்து நடிகரை வாட்டி வதைக்கிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











