அந்த நடிகையின் சாபம் தான்.. இனிமே அஸ்திவாரமே ஆட்டம் காணப் போகுது.. நடிகர் நிலைமை இப்படி ஆகிடுச்சே!
சென்னை: பக்கத்து ஸ்டேட்டில் இருந்து மகன் திருமணம் செய்து வந்த நடிகைக்கு குடும்பத்தினர் கொடுத்த குடைச்சல் மற்றும் காதலித்த நடிகரே ஏமாற்றி மோசம் பண்ண நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். உங்க சகவாசமே வேண்டாம் என நடிகை அந்த நடிகரை பிரிந்த நிலையில், காத்திருந்த நடிகர் கச்சிதமாக தனது ரகசிய காதலியை திருமணம் செய்ய தயார் ஆனது கூட நடிகைக்கு பிரச்சனை கிடையாதாம்.
ஆனால், நடிகையை வெறுப்பேற்றும் வண்ணமாக அந்த நடிகர் செய்த வேலையும், அவருக்கு ஒத்து ஊதிய நடிகரின் குடும்பத்தாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க என அந்த நடிகை நினைக்கவில்லை என்றால் கூட அவரது ரசிகர்கள் பலரும் சாபம் விட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த சாபம் தான் தற்போது நடிகரை வாட்டி வதைப்பதாகவும், இதுதான் ஆரம்பம் என்றும் இன்னமும் அடிமேல் அடி விழும் என சினிமா பிரபலம் ஒருவரே தனது நண்பர்களுக்குள் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகைக்கு நடந்த அநீதி: சினிமாவில் ஹீரோயினாக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்த அந்த நடிகையை காதல் வலை வீசி கல்யாணம் செய்து கவர்ந்து சென்ற அந்த நடிகர் கூண்டுக்கிளி போல மாற்ற முயற்சித்தார். திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சி உடைகளை கூட அணியாமல் படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால், தான் மட்டும் தான் அடக்க ஒடுக்கமாக இருக்கிறேன் என்றும் தனது கணவர் செயலில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை கண்டதும் நடிகை கடுப்பாகி விட்டார்.
இனிமே செட்டாகாது: கணவரின் நடத்தை சரியில்லை என்பதை அறிந்த நிலையில், அவரிடம் கேள்விகள் எழுப்ப, நடிகை மீதே பிரச்சனைகள் திருப்பப்பட்ட நிலையில், இனிமேல் நமக்கு இடையே செட்டாகாது என்கிற முடிவுக்கு வந்த நடிகை பிரியும் முடிவை எடுத்ததாக கூறுகின்றனர்.
நடிகையின் சாபம் தான் காரணம்?: நடிகையை கழட்டி விட்டு விட்டு இன்னொரு நடிகையுடன் அந்த பிரபல நடிகர் திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில், நடிகையை வெறுப்பேற்ற பண்ண வேலை தான் நடிகையின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டது என்றும் அதன் காரணமாகத்தான் தற்போது நடிகரின் குடும்பத்தில் மிகப்பெரிய இடி விழுந்திருப்பதாக கூறுகின்றனர். இதுவெறும் டிரெய்லர் தான் என்றும் இனிமேல் இன்னும் அதிகமாக நடக்கும் என பிரபல நடிகர் ஒருவரே சினிமா நண்பர்களுடன் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆரம்பத்தில் இருந்தே அந்த நடிகருக்கும் அவருக்கும் ஆகாது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











