மேட்டரே வேறயாம்.. நடிகையின் அந்த வீடியோவுக்கு இவ்ளோ ரியாக்‌ஷன் இல்லையாம்.. பெரிய பிரச்சனை இருக்கு?

By Staff

சென்னை: இளைஞர்கள் மத்தியில் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி இந்தியளவில் பிரபலமான அந்த நடிகையின் ஃபேக் வீடியோ பல பிரபலங்களையே கருத்து சொல்லவும் அதை ரிப்பீட் மோடில் ஷேர் செய்து கமெண்ட் போடவும் வைத்துள்ளது.

இப்படியொரு வீடியோவுக்காக இந்த குதி குதிக்கிறாங்க என்றும் சீனியர் நடிகர் முதல் ஜூனியர் நடிகர் வரை ஆதரவு குரல் கொடுக்கிறாங்களே என்று விசாரித்துப் பார்த்தால் வேறு பல சங்கதி எல்லாம் வெளியாகி பெரும் அச்சத்தை உண்டாக்குகின்றன.

Popular actress Deep Fake controversy raises due to another big issue?


அந்த வீடியோ வெறும் சாம்பிள் தான் என்றும் அதை விட மோசமாக எடிட் செய்யப்பட்ட பல வீடியோக்கள் ஆபாச வலை தளங்களில் அச்சு அசல் அந்த நடிகை போலவே இருப்பதாக பகீர் கிளப்பி உள்ளனர்.

நடிகையின் எக்ஸ்பிரஷன்: இந்த நடிகை இப்படியொரு ஃபேக் வீடியோவில் வசமாக சிக்க அவர் படங்களிலும் அடிக்கடி பொதுவெளியிலும் கொடுக்கும் ஓவர் எக்ஸ்பிரஷன்கள் தான் காரணம் என்கின்றனர். நடிகைகளின் எக்ஸ்பிரஷன்கள் எந்தளவுக்கு ஆபாச வீடியோக்களுக்கு மேட்ச் ஆகிறதோ அந்தளவுக்கு ஃபேக் வீடியோக்களை தத்ரூப வீடியோக்களாக ஏஐ மூலம் உருவாக்க முடியும் என கதிகலங்க விடுகின்றனர்.

நடிகைகளுக்கு மட்டுமில்லை: இந்த டீப் ஃபேக் வீடியோவால் நடிகைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை என்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகள், கல்லூரி மாணவிகள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ போடும் இளம் பெண்கள் என பலருக்கும் பெரிய பாதிப்பு உருவாகும் என்றும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி கற்பனைகளை கண்முன் கொண்டு வர நினைக்கும் அதே நேரத்தில் நிர்வாண படங்களில் எந்த நடிகையை வேண்டுமானாலும் அவர்கள் நடிக்காமலே அவர்கள் நடித்தது போல காண்பிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

கதறிய நடிகை: தன்னுடைய மோசமான ஆபாச வீடியோக்கள் அந்த மாதிரியான வெப்சைட்டில் அதிகம் பரவி வருவதை பார்த்து அப்செட்டான நடிகை கதறி அழுதுள்ளாராம். அந்த வீடியோக்களை வைத்து பிரச்சனையை கொண்டு வந்தால், அதனை அதிகம் பேர் பார்ப்பார்கள் என்றும் அதிகம் ஷேர் செய்யப்படும் என்பதால் தான் இப்படி சிக்கிய ஒரு வீடியோவை வைத்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

பணம் சம்பாதிக்குறாங்க: நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களை பார்க்கவே வெளிநாடுகளில் பலரும் விருப்பம் தெரிவித்து வருவதால் அப்படி ஆபாசமாக நடிக்காத நடிகைகளையும் நடித்தது போல உருவாக்கி அதிகளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர் என்றும் அந்த பிரபல நடிகையின் கணவர் கைது செய்யப்பட்டதை போல இது போன்ற ஆபாச ஆப்களை உருவாக்குபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்த ஏஐ தொழில்நுட்பத்திற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X