அந்த கோபம் தானாம்.. மாஸ் நடிகருக்கு வாழ்த்துக் கூட சொல்லாத சமத்து நடிகை.. என்ன ஆச்சு?
சென்னை: அடுத்து மாஸ் நடிகர் படத்தில் தான் நடிக்கப் போகிறோம் என்கிற உற்சாகத்தில் கடந்த ஆண்டு ஆட்டம் எல்லாம் போட்டு வாழ்த்து சொன்ன அந்த சமத்து நடிகை இந்த முறை அப்படியே கண்டுக் கொள்ளாமல் கடந்து போய் விட்டாராம்.
மாஸ் நடிகருடன் ஒரு சில படங்களில் ஜோடிப் போட்டு நடித்துள்ளார் அந்த சமத்து நடிகை. மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நடிகைக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் கிளம்பிய நிலையில், அந்த நடிகை வேண்டாம் என கூறி விட்டாராம் மாஸ் நடிகர்.
இன்னொரு டாப் ஹீரோயினுக்கு அந்த வாய்ப்பு போன நிலையில், அடுத்த படத்திலாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் நோ சொல்லி விட்டாராம் மாஸ் நடிகர்.

கடுப்பான நடிகை: மாஸ் நடிகரை வைத்து காப்பி இயக்குநர் இயக்கும் படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நடிகையின் கனவில் பெரிய கல்லைத் தூக்கிப் போடும் அளவுக்கு அந்த காப்பி இயக்குநர் படத்துக்கே நோ சொல்லி விட்டு இன்னொரு இயக்குநரை மாஸ் நடிகர் டிக் செய்து விட்டார்.
இந்நிலையில், கோலிவுட்டில் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியாது என்கிற கோபம் தான் அந்த நடிகை மனதில் தற்போது ஹெவியாக உள்ளது என்கின்றனர்.
வாழ்த்தே சொல்லல: போன வருஷம் பிறந்தநாளுக்கு எல்லாம் ஆட்டம் போட்டு வாழ்த்து தெரிவித்த அந்த சமத்து நடிகை உடம்பு சரியில்லாமல் இருந்த போது கூட அவருக்கு மாஸ் ஹீரோ போன் செய்து கூட நலம் விசாரிக்கவில்லையாம்.

மேலும், பட வாய்ப்பும் கிடைக்காமல் போன நிலையில், இந்த முறை மாஸ் நடிகர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதை நடிகை நைஸாக தவிர்த்து விட்டார் என்றும் எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.
அந்த நடிகையும் அமைதி: இந்த ஆண்டு வெளியான அந்த சீரியல் படத்தில் நடித்த நடிகையையும் மாஸ் நடிகர் வீணடித்து விட்டார் என்கிற கோபத்தில் அந்த நடிகையும் உள்ள நிலையில், கடந்த ஆண்டு சொன்னது போல இவரும் வாழ்த்தவில்லை என்கின்றனர்.
மேலும், சமீபத்தில் வெளியான மாஸ் நடிகரின் பாட்டுக்கும் இதுவரை எந்தவொரு நடிகையும் ஆட்டம் போட்டு ரீல்ஸ் போடாமல் அவாய்டு செய்து விட்டனர் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











