சொந்த காசுல பத்து பைசா கூட போடலையா?.. நம்பர் நடிகை பண்றது எம்எல்எம் பிசினஸா? என்னங்க நடக்குது?
சென்னை: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நம்பர் நடிகைக்கு மார்க்கெட் இங்கே டவுன் ஆனது தெரிந்தும் பிசினஸில் அதிக ஆர்வத்தை செலுத்த தொடங்கி விட்டார் என அவரது ரசிகர்கள் சந்தோஷம் அடைந்து வரும் நிலையில், அந்த பிசினஸில் அவர் ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை பார்த்து சொத்துக்களை சேர்த்து வருவதாக பிரபலம் ஒருவர் கிளப்பிய பகீர் பேச்சு கோடம்பாக்கத்தில் புயலை கிளப்பியுள்ளது.
நடிகை தயாரிப்பு நிறுவனம் நடத்தும் போதே பத்து பைசா கூட போட்டது கிடையாது என்றும் அவர் எப்படி தனது சொந்த காசுல பிசினஸ் எல்லாம் பண்ணுவார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் நடிகையின் தொழில்துறை மீதும் அடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகையை இப்படி தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதே அவரது ஆசை கணவர் தான் என்றும் அந்த பிரபலம் பகீர் கிளப்பியிருப்பது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படங்கள் ஓடல: கோலிவுட்டில் டாப் இடத்தில் இருந்த நடிகைக்கு சமீப காலமாக எந்தவொரு படங்களும் ஓடாத நிலையில், பல முன்னணி நடிகர்கள் அய்யோ அந்த நடிகை வேண்டவே வேண்டாம்ப்பா என ஒதுக்கி வைத்து விடுகிறார்களாம். நடிகை எந்தவொரு பட புரமோஷனுக்கும் வராமல் தங்கள் படங்களுக்கு உதவி செய்ய மறுப்பதை பார்த்து டென்ஷனான தயாரிப்பாளர்களும் நடிகையை இனிமேல் புக் செய்ய வேண்டாம் என இயக்குநர்களிடமே சொல்லி விட கோலிவுட்டில் நடிகையின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சரிவை சந்தித்திருப்பதாக கூறுகின்றனர்.
ஏகப்பட்ட பிசினஸ்: திடீரென நடிகை தனது ரூட்டை பிசினஸ் பக்கம் திருப்ப, இத்தனை கோடிகளை கொட்டி நடிகை முதலீடு செய்கிறாரா என ஷாக்கான கோடம்பாக்கத்துக்கு தற்போது நடிகையின் பிசினஸ் பற்றிய கிசுகிசுக்கள் கிளம்ப அந்த நம்பர் நடிகை தான் பலருக்கும் வாயில் அவலாக சிக்கியிருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
எம்எல்எம் மோசடி: சதுரங்க வேட்டை படத்தில் எம்எல்எம் எனும் தொழில் யுக்தி மோசடி குறித்து எச். வினோத் படமெடுத்து காட்டியிருப்பார். தங்கள் பொருட்களை விற்க ஆட்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் நடிகை சொந்த பணத்தில் இந்த வியாபாரத்தை செய்யாமல் தனது பெயரை பயன்படுத்திக் கொண்டு சிறு குறு தொழிலார்கள் மற்றும் இன்வெஸ்டர்களுடன் இணைந்து இந்த பிசினஸை ஏதோ தானே செய்வது போல நாடகமாடி ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றி வருகிறார் என அந்த பிரபல சர்ச்சை தயாரிப்பாளர் பேசியுள்ளது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக நடிகை தரப்பில் இருந்து கூடிய சீக்கிரமே விளக்கம் வெளியாகுமா? அல்லது தயாரிப்பாளரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











