எல்லாமே வயித்துக்குத்தான் டா.. பெரிய அமவுண்ட் செட்டில்.. கிரிஞ்ச் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!
மும்பை: சும்மாவே அந்த கட்சியினர் விளம்பரத்துக்கு பெரிய தொகையை செலவு செய்வது வாடிக்கை தான். மேலும், நாடு முழுவதும் நடிகர்களை விட அதிகமாக நடிகைகளை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய இணைப்பாக அந்த கிரிஞ்ச் நடிகையும் வண்டியில் ஏறியிருப்பதாக கூறுகின்றனர்.
வெயிட்டான அமவுண்ட் கொடுத்ததால் சரக்கு விளம்பரத்தில் நடிப்பது போலத்தான் இதுவும் ஒரு விளம்பரம் என அந்த நடிகை தனது ஓவர் ஆக்டிங் நடிப்பை வெளிப்படுத்தி கல்லா கட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் படங்கள் மற்றும் விளம்பரங்கள் என வரிசையாக அந்த நடிகைக்கு வாழ்க்கை பிரகாசமாக அமைந்து வருவதால் அம்மணி செம ஹேப்பியாக உள்ளார் எனக் கூறுகின்றனர்.
கைவிட்ட காதலர்: இந்த நடிகையை காதலிக்க ஆரம்பித்த ராசி தான் நடிக்கும் படங்கள் எல்லாம் உருப்படாமல் போகிறது என நினைத்த அந்த யங் ஹீரோ இந்த நடிகையை பிரேக்கப் செய்து விட்டதாக கூறுகின்றனர். அதனால், கடுப்பான நடிகர் சினிமாவில் பெரிய நடிகையாக மாறிக் காட்டுகிறேன் என சபதம் போட்டு விட்டுத்தான் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து பல பிரபல ஹீரோக்கள் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
விளம்பரத்துக்கு பல கோடி: பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க சில கோடிகள் வாங்கி வந்த நிலையில், தனது சம்பளத்தை விட இரு மடங்கு தொகையை தற்போது நடித்த விளம்பரத்துக்காக அந்த கிரிஞ்ச் நடிகை வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகியுள்ளன. நடிகையின் விளம்பரம் எப்படி இருந்தாலும் நாடு முழுவதும் ஓவர் நைட்டில் ஹிட் ஆகி விடும் என்பதால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் வாரி கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
விரைவில் அரசியல்: அந்த நடிகையை விரைவில் அரசியலுக்குள் அழைத்து வரும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். விளம்பர காசுக்கு ஆசைப்பட்டு நடித்த நடிகைக்கு தற்போது அரசியல் அழுத்தங்கள் வர ஆரம்பித்து இருப்பதால் பெரிய சிக்கலில் சிக்குவதற்கு முன்பாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. அந்த பிரபல நடிகர் படத்தில் நடிக்க கமிட் ஆக காரணமும் இந்த விளம்பரம் தான் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











