துபாயில் பெரிய பில்டிங்.. சைடு பிசினஸில் கோடிகளில் புரளும் நம்பர் நடிகை?.. அதுதான் காரணமா?

By Staff

சென்னை: சினிமாவை மட்டுமே நம்பியிருந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கஷ்டமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்துக் கொண்டு நம்பர் நடிகை பல பிசினஸ்களில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர். தனியாக சொகுசு விமானம் முதல் ஏகப்பட்ட ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகை துபாயில் தனியாக பெரிய பில்டிங்கையே வைத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

அதனால்தான் அடிக்கடி அங்கே டூர் அடிக்க கிளம்பி விடுகிறார் என்றும் துபாயில் அவருக்கு ஏகப்பட்ட தொழிலதிபர்களுடன் மிகப்பெரிய நட்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

வருமானம் ஈட்டக் கூடிய வகையில் உள்ள பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அதிகளவில் சம்பாதித்து வருகிறார் நம்பர் நடிகை என்கிற பேச்சுக்களும் கோடம்பாக்கத்தில் அதிகம் கிளம்பியுள்ளன.

தொழிலதிபர்களுடன் தொடர்பு: சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களுடனும் நல்ல இணக்கமான நட்பு வட்டாரத்தை பேணிக்காத்து வருகிறாராம் நம்பர் நடிகை. அதன் காரணமாக அவருக்கு பல்வேறு வகையில் லாபங்கள் கிடைப்பதால் தான் இந்தளவுக்கு அதிரடியாக பல கோடிகளுக்கு அவர் அதிபதியாகி விட்டார் என்கின்றனர்.

சினிமாவில் சம்பாதிப்பதை விட: இத்தனை ஆண்டுகள் சினிமாவில் சம்பாதித்த பல கோடி வருமானத்தை சரியான முறையில் முதலீடு செய்து அதை அப்படியே மூன்று மடங்காக மாற்றிவிட்டார் என்றும் சினிமாவில் சம்பாதிப்பதை விட ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சைடு பிசினஸில் தான் நம்பர் நடிகை கோடிக் கணக்கில் தற்போது சம்பாதித்து வருவதாக கூறுகின்றனர்.

பொறாமையில் சக நடிகைகள்: சினிமாவை தாண்டி தொழில் ரீதியாகவும் பல கோடிகளை அந்த நம்பர் நடிகை எப்படித்தான் சம்பாதிக்கிறாரோ என பல டாப் ஹீரோயின்கள் பொறாமையில் பொங்கி வருகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

gossip kollywood actress gossip

துபாயில் பெரிய பில்டிங்: துபாய்க்கு அடிக்கடி நடிகை சென்று வரக் காரணமே அங்கே அவருக்கென சொந்தமாக ஒரு பில்டிங்கே உள்ளது என்றும் அதன் விலை மட்டுமே பல கோடிகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் அவருக்கு சொந்தமாக வீடுகள், அலுவலகங்கள் என வரிசையாக வாங்கிப் போட்டு பிசினஸ் செய்து வருகிறார் என்கின்றனர்.

6 மாதம் கடின உழைப்பு: சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டு சுமார் 6 மாத காலம் கடுமையாக நடிகையே களமிறங்கி உழைத்ததில் தான் தன்னுடைய சாம்ராஜ்யத்தை இந்தளவுக்கு அவர் உயர்த்தியுள்ளார் என்றும் இப்போதைக்கு அவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி முதல் 300 கோடி இருக்கும் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X