நம்பர் நடிகைக்கு போன் போட்ட எக்ஸ் லவ்வர்.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டன்னு பொறாமை வேற!
சென்னை: யாருமே எதிர்பார்க்காத வகையில் பல வருடங்கள் கழித்து மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடித்தது மட்டுமின்றி மாஸ் நடிகரையும் அவரது மனைவியையுமே பிரித்து விட்டார் அந்த நம்பர் நடிகை என்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சமீபத்தில் நம்பர் நடிகையின் எக்ஸ் லவ்வர் போன் செய்து நடிகையுடன் சில விஷயங்கள் பேசினார் என்கிற கிசுகிசுக்கள் கசிந்துள்ளன.

அதிலும், குறிப்பாக நடிகையை மிஸ் செய்து விட்டேனே என்கிற ஃபீலிங் தான் அவரது பேச்சில் ஓவராக இருந்ததாக கூறுகின்றனர்.
சிலருடன் நெருக்கம்: சினிமாவில் போராடி முன்னணி நடிகையாக மாறி சில பல தியாகங்களை எல்லாம் செய்து தான் அந்த நம்பர் நடிகை பெரிய இடத்தை பிடித்தார் என்று சினிமா வட்டாரத்தில் அந்த காலத்தில் இருந்தே பேச்சுக்கள் புகைந்துக் கொண்டு தான் இருக்கின்றன. தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தாராளமாக பார்ட்டி செய்வது நெருங்கி பழகுவது என கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அள்ளி உச்சத்துக்கு சென்ற அந்த நடிகை சில பிரபலங்களுடன் மட்டும் ரொம்பவே க்ளோஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறுகின்றனர்.
போன் பண்ண எக்ஸ் லவ்வர்: அதிலும் பக்கத்து ஸ்டேட் நடிகர் ஒருவருடன் அம்மணி ரொம்பவே நெருங்கி பழகி லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் எல்லாம் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகைக்கு போன் செய்த மாஜி காதலர் இன்னொரு நடிகையுடன் ஏற்பட்ட பழக்கத்தால் இந்த நடிகையை கழட்டிவிட்டது ரொம்பவே தப்பாகி விட்டதே என தற்போது நடிகையிடமே புலம்பும் அளவுக்கு அவருடைய நிலைமை ரொம்பவே மோசமாகி விட்டது எனக் கூறுகின்றனர்.
புளியங்கொம்பை புடிச்சிட்ட: பல வருடங்கள் கழித்து நடிகையை தொடர்பு கொண்டு பேசிய எக்ஸ் லவ்வர், நடிகையிடம் நலம் விசாரித்து விட்டு கடைசியாக புடித்தாலும் புளியங்கொம்பா புடிச்சிட்ட என்பது போல பேசியது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது என்கின்றனர். நடிகையை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணுவதை விட தனது எக்ஸ் லவ்வர் பெரிய நடிகருடன் தொடர்பில் இருப்பதை அறிந்து புதிதாக எதையாவது தேற்றலாமா? என்கிற பிட்டை எல்லாம் போட்டு பார்த்தார் என்றும் நடிகை எதற்கும் அடிபணியாமல் அவருக்கு அல்வா கொடுத்து போனை கட் செய்து விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











