பண்றதை எல்லாம் பண்ணிட்டு கழட்டி விட்ட காதலன்.. மறக்க முடியாமல் அழுது புலம்பும் ஹீரோயின்!
சென்னை: எப்படியாவது தனது காதலருடன் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என அந்த இளம் நடிகை ரொம்பவே முயற்சி செய்து வருகிறார் என திடுக்கிடும் தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே அந்த நடிகர் மீது ஜொள்ளு விட்டு அவர் பின்னாடியே திரிந்தது அந்த நடிகை தானாம்.
இளம் நடிகருக்கு இருந்த ரசிகர் வட்டத்தை தனது ரசிகர்களாக அப்படியே மாற்றிக் கொண்ட நடிகை அந்த நடிகர் மூலமாகத்தான் பல பெரிய நடிகர்கள் படங்களிலும் கமிட் ஆகி வந்தாராம்.

ரகசியமாக தனது காதலை வைத்திருந்த நடிகருக்கு அந்த விஷயத்தை காதலித்து வந்த நடிகை தான் வெளியே கசியவிட்டார் என்று தெரிந்ததும் கடுப்பாகி விட்டார் என்கின்றனர்.
துரத்தி துரத்தி லவ் பண்ண நடிகை: சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், தவித்துக் கொண்டிருந்த நடிகைக்கு அந்த நடிகரின் ஒரே படத்தில் வேறலெவல் அங்கீகாரம் மற்றும் முன்னணி நடிகையாக மாறும் வாய்ப்பு கிடைத்ததை அவரே எதிர்பார்க்கவில்லையாம். இவருடன் எப்போதும் ஒன்றாக இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என நினைத்து அந்த நடிகரை துரத்தி துரத்தி காதல் செய்ததே அந்த நடிகை தான் என்கின்றனர்.
படு நெருக்கமாக: கடந்த சில ஆண்டுகளாக நடிகையின் காதலை ஏற்றுக் கொண்டு நடிகையுடன் பிரைவேட் வாழ்க்கையே நடத்தியிருக்கிறாராம் அந்த நடிகர். ஆனால், அவர் இந்த ஒரு நடிகையுடன் மட்டுமின்றி அவருடன் நடித்த ஒரு சில நடிகைகளுடனும் இதே போல ஜாலியான தனிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்து இருக்கிறார். இந்த விஷயம் தெரிந்த நிலையில் இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டு விட்டதாம்.
கல்யாண டார்ச்சர்: இதற்கு முன் எப்படி இருந்தாயோ அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. இனிமேல் என் வாழ்க்கை முழுவதும் நீ என்னவனாக இருக்க வேண்டும் என நடிகை அடம்பிடித்து கல்யாண டார்ச்சர் செய்தும் இருவர் குறித்த காதல் பற்றி கசியவிட்டும் வந்த நிலையில், நடிகர் ரொம்பவே கடுப்பாகி விட்டார் என்கின்றனர்.
அழுது புலம்பும் நடிகை: இனிமேல் நீ எனக்கு செட்டாக மாட்ட இதுவரை நான் பழகிய நடிகைகள் யாருமே எனக்கு இப்படியொரு டார்ச்சர் கொடுத்தது இல்லை. இதற்கு மேல் போன் கூட பேசாதே என நடிகையை நைசாக அந்த நடிகர் கழட்டி விட அந்த நடிகரை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என நடிகை அழுது புலம்பி வருவதாகவும் நடிகரின் உறவினர்கள் மற்றும் மேனேஜர்கள் மூலமாக தூது விட்டு வருகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











