ஓவர் ஆக்டிங் நடிகையின் ஓவர் பந்தா.. ஆப்பமாவு அலமேலு என அசிங்கப்படுத்திய பிரபலம்!
சென்னை: மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அந்த ஓவர் ஆக்டிங் நடிகை தயாரிப்பாளர்கள் காசை ரொம்பவே கரியாக்கி வருகிறாராம். மேலும், படப்பிடிப்பு தளத்தில் மட்டுமின்றி பப்ளிசிட்டிக்கு போகும் இடங்களிலும் அவர் பண்ணும் பந்தாவுக்கு ஒரு அளவே இல்லை என்கின்றனர்.
பான் இந்தியா அளவில் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அம்மணிக்கு தலை கால் புரியவே இல்லை என்றும் பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

மேலும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்றால், பழைய இடத்தை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்து விடுவது பலரையும் கடுப்பாக்கி உள்ளது. இந்நிலையில், நடிகை போடும் ஓவர் சீனை பார்த்த நடிகர் ஒருவர் நம்பர் நடிகை போலவே ஆக எப்படியெல்லாம் ஐடியா பண்ணுகிறார் பாருங்க என நடிகையின் அடுத்த பட அப்டேட்டை பார்த்து கலாய்த்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெனாவட்டு ஜாஸ்தி: நடிப்பில் ஒரே ஒரு படம் ஓடிய நிலையில், தொடர்ந்து நடிப்புக்கு நான் தான் அரசி என வரிசையாக சோலோ படங்களில் நடித்து ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் டென்ஷன் படுத்தி வருகிறார். நாடு முழுவதும் அனைத்து இண்டஸ்ட்ரியிலும் அம்மணியை அழைத்து வரும் நிலையில், புகழின் உச்சத்தில் ரொம்பவே தெனாவட்டாக ஆடி வருகிறார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஓவர் பந்தா: முன்பெல்லாம் நம்பர் நடிகை எந்தளவுக்கு பந்தா பண்ணிக் கொண்டு இருந்தாரோ தற்போது அவரையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்த ஓவர் ஆக்டிங் நடிகை பந்தா பண்ணி வருகிறாராம். சமீபத்தில் மும்பைக்கு சென்று வந்ததில் இருந்தே அம்மணியின் நடை உடை பாவனை என அனைத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருப்பதாக கூறுகின்றனர்.
மட்டம் தட்டுறாரு: ஒரு ஸ்டேட்டில் இருந்து இன்னொரு ஸ்டேட்டுக்கு படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்ததும் மற்ற மாநில ரசிகர்களுக்கு தான் பேசுவது என்ன தெரியவா போகுது என்கிற மிதப்பில் மட்டம் தட்டி பேசுகிறார் என்றும் சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சை அவருக்கே பெரிய இடியாக தலையில் விழுந்தது தான் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. அதனை சமாளிக்க நல்லாவே நடிகை முட்டுக் கொடுத்தார்.
நம்பர் நடிகையை ஃபாலோ பண்றாரு: நம்பர் நடிகை எப்படி பாலிவுட்டுக்குப் போனாரோ அவரை அப்படியே ஃபாலோ செய்து இந்த நடிகையும் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், நம்பர் நடிகைக்கு ஹிட் கொடுத்த அந்த படத்தின் பாணியிலேயே இவரும் புதிய படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை கடுப்பாக்கியிருக்கிறது.
ஆப்பமாவு அலமேலு: நம்பர் நடிகையின் படத்தில் நல்ல நகைச்சுவை மற்றும் நடிகையின் அண்டர்பிளே நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால், மாஸ் நடிகரை போல ஓவர் ஆக்டிங் நடிகை மாஸ் காட்ட முயற்சித்ததை பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இவர் என்ன ஆப்பமாவு அலமேலுவா என நடிகையின் புதிய படத்தின் அப்டேட்டை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே கலாய்த்து சிரித்து விட்டாராம். அதை பார்த்து ஷாக்கான மற்ற நடிகர்கள் நடிகருக்கு முன்னால் சிரித்தாலும் விஷயத்தை வெளியே நடிகையின் காது படவே கசிய விட்டு விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











