குழந்தைங்களுக்காகன்னு சொன்னதெல்லாம் சுத்தமான உருட்டாம்.. பிரைட் நடிகர் மனைவியின் பிளானே வேறயாம்?
சென்னை: பிரைட் நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அந்த ஓவர் ஆக்டிங் நடிகைக்கு கணவரிடமே ஆக்டிங் செய்து அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க பக்காவாக திட்டமிட்டு விட்டார் என திடுக்கிட வைக்கின்றனர். கணவரை வேறு ஊருக்கு கொண்டு சென்றதற்கான காரணமே வேறு என்றும் வெளியே அவர் சொல்வதெல்லாமே உருட்டுகள் தான் என்றும் கூறுகின்றனர்.
மனைவி சொல்வதற்கெல்லாம் பூம்பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டே இருக்கும் நடிகர் தனக்கும் அதன் மூலம் பெரிய ஆதாயம் வருவதை அறிந்து வாய் பிளந்து அனைத்துக்கும் ஓகே சொல்லி வர காரணமே அதுதான் என்கின்றனர்.

அக்கா மூலம் கிடைத்த வாய்ப்பு: தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மீண்டும் பிசியான நடிகையாக மாறிய தங்கைக்கு இங்கே வந்துடு எத்தனை வயதானாலும் இங்கே பெரிய வாய்ப்பு உனக்கு கிடைக்கும் என அந்த பிரபல நடிகர் படத்தை தயாரிக்கும் வாய்ப்பையே ஏற்படுத்திக் கொடுத்தது நடிகையின் அக்கா தான் என்கின்றனர். அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே பிரைட் நடிகரின் மனைவியும் பிரபல நடிகையுமான அவர் அந்த ஸ்டேட்டில் சென்று செட்டில் ஆகியிருக்கிறார்.
குழந்தைங்க ஒரு சாக்கு: குழந்தைகளுக்காக சென்றோம், அப்பா அம்மாவை பார்க்கணும்னு சொல்வதெல்லாமே ஒரு சாக்குத்தானே தவிர உண்மையில்லை என திடுக்கிட வைக்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தைகளை கண்டுக் கொள்ளாமல் நடிப்பில் தான் அந்த நடிகை கவனம் செலுத்தி வந்தார் என்றும் இப்போ குழந்தைகள் வளர்ந்து விட்ட பின்னர் அவர்களை ஏன் கண்டுக் கொள்ளப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
கணவருக்கு மெகா ஆஃபர்: கோலிவுட்டில் டயர் ஒன் நடிகராக வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தனது கணவருக்கு உங்க திறமைக்கு பாலிவுட்டிலேயே பெரிய ஸ்டார் ஆக்குறேன் வாங்க என அழைத்துச் சென்ற நிலையில், பெரிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பும் லட்டு போல கிடைத்துள்ளதாம்.
அடுத்தடுத்த படங்களில் நடிகை பிஸி: ஒரே ஒரு படம் தான் அங்கே நடிக்கப் போறேன் என ஆரம்பித்தில் சொல்லி விட்டு தற்போது நடிகைக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் அணிவகுத்து காத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. பக்காவாக பிளான் போட்டு அங்கே சென்றது நடிகைக்கு கைமேல் பலனை கொடுத்துள்ளது என்கின்றனர். சினிமாவை தாண்டி அங்கே பெரிய பிசினஸ் ஒன்றையும் சீக்கிரமே அந்த நடிகை ஆரம்பிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











