வருங்கால கணவருக்காக வேறலெவலில் வேலை செய்த நம்பர் நடிகை.. அந்த படம் எப்படி கிடைத்தது தெரியுமா?

By Staff

சென்னை: டாப் நடிகரை வருங்கால கணவர் இயக்க காரணமே நம்பர் நடிகை தான் என பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அந்த அன்பான இயக்குநர் டாப் நடிகரை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

பெரிய நடிகர்களை இயக்க முடியவில்லையே என புலம்பி வந்த அவருக்காக அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே நடிகை தான் என கூறுகின்றனர்.

திருமணம் ஆகிடுச்சா

திருமணம் ஆகிடுச்சா

நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாக எளிமையான முறையில் நம்பர் நடிகை செய்து கொண்டாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி ஏகப்பட்ட பிரபலங்கள் மத்தியிலும் எழுந்து இருக்கிறதாம். சமீபத்தில் அப்படியொரு கோலத்தில் நடிகையை பார்த்தவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டார் நடிகை என்றே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

பிரைவசி எதிர்பார்ப்பவர்

பிரைவசி எதிர்பார்ப்பவர்

நம்பர் நடிகை அதிகளவு கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் பிரைவசியை எதிர்பார்ப்பவர் என்பதும் இண்டஸ்ட்ரியில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று தான். மற்ற நடிகைகளை போல சமூக வலைதளங்களிலும் ரசிகர்களுடன் டச்சில் இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஆபாசமாக கமெண்ட்டுகள் அடித்து விடுவார்களோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நேரடியான சந்திப்புகள் தான் நல்லது என்பதை திடமாக நம்புவர் அவர்.

பிசினஸ் ஐடியா

பிசினஸ் ஐடியா

காதலருக்கு தொழில் ரீதியாக ஏகப்பட்ட பிசினஸ் ஐடியாக்களை கொடுத்து வருவதே நம்பர் நடிகை தான் என்றும், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமாவை தாண்டி ஏகப்பட்ட பிசினஸ்களையும் துவங்கி ரகசியமாக நடத்தி வருகிறார் நம்பர் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பாதிக்கும் பணத்தை உபயோகமாக செலவு செய்வதும் பெருக்குவதும் நல்ல விஷயம் தானே என விஷயம் தெரிந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

டாப் நடிகர் படம்

டாப் நடிகர் படம்

வருங்கால கணவருக்காக தனது கால்ஷீட்களை வாரிக் கொடுத்து நடித்து வரும் நம்பர் நடிகை பெரிய நடிகர்களுடன் படம் இயக்க வேண்டும் என்கிற காதலரின் ஆசையை புரிந்து கொண்டு அவருக்காக அந்த புராஜெக்டையும் முடித்துக் கொடுத்திருக்கிறாராம் அன்பான காதலி. அந்த விஷயம் தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக அனல் பறக்கிறது.

பெரிய டீல்

பெரிய டீல்

அந்த பக்கத்து நாட்டு நிறுவனத்திடம் டாப் நடிகர் படம் கிடைக்க இவ்வளவு தொகை கேட்கிறார்கள் என்றும் உடனடியாக இந்த தொகைக்கு ஓகே செய்தால் உங்களுக்கு அந்த படம் கிடைத்து விடும் என அந்த நிறுவனத்தின் உரிமையாளரான தனது நண்பருக்கு நம்பர் நடிகை போன் செய்து ஐடியா கொடுத்தது தான் இந்த படம் இவ்வளவு விரைவாக அமைய காரணமே என்கின்றனர்.

காதலர் ஹேப்பி

காதலர் ஹேப்பி

டாப் நடிகரின் பல படங்களில் வெறும் சாதாரண பங்களிப்பை மட்டுமே கொடுத்து வருகிறோமே அவரை எப்போது தான் இயக்கப் போகிறோம் என புலம்பிக் கொண்டிருந்த காதலருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் போல இந்த விஷயத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார் நம்பர் நடிகை என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X