பிரபல தயாரிப்பாளரை கவனித்தது வீண் போகலயாம்.. அந்த சிம்பதி குயினுக்கு பெரிய சான்ஸ் கிடைச்சிடுச்சா?
சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த நடிகை திடீரென இனிமேல் எதற்கும் யூஸ் ஆக மாட்டார் என அறிந்துக் கொண்ட முன்னணி நடிகர்கள் அந்த நடிகையை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றே சொல்லி விட்டார்களாம்.
அந்த கேப்பை டேமேஜ் கன்ட்ரோல் பண்ண நினைத்த நடிகை உடலை பழைய பன்னீர் செல்வமாக கொண்டு வர ஏகப்பட்ட ட்ரீட்மெண்ட் எடுத்து வந்திருக்கிறார். அதன் பின்னரும் பல மாதங்கள் ஆகியும் நடிகைக்கு இன்னமும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கடைசியாக எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா என அந்த தயாரிப்பாளர் காலில் நடிகை விழுந்ததே பாலிவுட்டில் மீண்டும் நடிக்கத்தான் என்கின்றனர்.
நெஞ்சை நக்கிட்டாரே: அந்த தயாரிப்பாளர் இதுவரை வாரிசு நடிகைகள் மட்டுமே வளர்த்து விட்டு வருகிறார். ஆனால், காலில் எல்லாம் விழுந்து வாய்ப்புக் கொடுங்க என கேட்காமல் நடிகை கேட்டதை புரிந்துக் கொண்ட தயாரிப்பாளர் நேரடியாக நடிகைக்கு தனது பேனரில் பட வாய்ப்புக் கொடுக்காமல் தனது நண்பர் மூலமாக சான்ஸ் கொடுக்க க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார் என்கின்றனர்.
துரத்தி விட்ட கோலிவுட்: பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கோலிவுட்டில் மாஸ் நடிகர், பிரைட் நடிகர் படங்களை பிடித்து விடலாம் என நடிகை நினைத்து இருக்கிறார். ஆனால், இருவரும் உஷாராக நடிகையை துரத்தி விட்டுவிட்டார்களாம். சரி டோலிவுட்டில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போடலாம் என நினைத்த நிலையில், அங்கேயும் அவருக்கு வாரிசு நடிகையால் நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக கூறுகின்றனர்.
சம்பளம் குறைப்பு: அதிக சம்பளத்தை கொடுத்து சிம்பதி குயினை புக் செய்ய வேண்டுமா? அவருக்கு இப்போ மார்க்கெட்டே இல்லையே என்று நடிகர்கள் நினைத்து வருவதை அறிந்த நடிகை திடீரென தனது சம்பளத்தையும் பாதியாக குறைத்து விட்டார் என்கின்றனர். இதுதான் சமயம் என்பதை புரிந்துக் கொண்ட அந்த தயாரிப்பாளர் நடிகையிடம் மேலும், பேரம் பேசி இன்னும் ஒரு கோடி ரூபாயை சம்பளத்தில் குறைத்து தற்போது பட வாய்ப்பை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
சீக்கிரமே அறிவிப்பு: இந்த படத்துக்கு சம்பளமே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. படம் ஹிட் ஆகி விட்டால் அடுத்து பல கோடி பில் போட்டு விடலாம் என்பதால் நடிகையும் அனைத்துக்கும் ஓகே சொல்லி தலையை ஆட்டியிருப்பாதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











