மிட் நைட்ல போன் பண்ணி கதறல்.. அந்த நடிகைக்கு அல்லு விட்ருச்சாம்.. நடிகரை தொடர்ந்து சிக்கப்போறாரா?
சென்னை: கோலிவுட்டில் ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு நேற்று இரவு தூக்கமே இல்லை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமா துறையிலும் கோடிகளில் புரளும் நடிகர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் புழக்கமும் தாராளமாக இருந்து வருவது தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்கின்றனர்.
நடிகருடன் ரொம்பவே சமீப காலமாக நெருக்கம் காட்டி வந்த அந்த பப்ளி நடிகைக்கும் போதைப் பொருள் சப்ளையில் சம்மந்தம் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், நேற்று இரவு பெரிய புள்ளி ஒருவரை போனில் தொடர்பு கொண்டு அழுது புலம்பியிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

எப்போதுமே பார்ட்டி குயினாக சுற்றி வரும் அந்த பப்ளி நடிகையும் இந்த தேடுதல் வலையில் வசமாக சிக்கினால் கம்பி தான் எண்ண வேண்டும் என்பதால் இரவு முழுக்க தூக்கமே இல்லாமல் புலம்பித் தவித்து விட்டார் என்கின்றனர். ஆனால், நடிகை குறித்து அந்த நடிகர் எந்த தகவலையும் வெளியிடாத வரையில் சிக்கல் இல்லை என்கின்றனர்.
கடைசியாக கோலிவுட்: மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போதைப் பொருள் பழக்கம் பெங்களூரில் தலை விரித்து ஆடிய நிலையில், பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் சிக்கினர். ஆனால், கடைசி வரை கோலிவுட் பக்கம் யாருமே சிக்காமல் இருந்து வந்த நிலையில், போலீசாருக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்காத நிலையில், அமைதியாக வலையை விரித்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கடைசியாக அரசியல் புள்ளி ஒருவரின் வாக்குமூலத்தால் வான்ட்டட்டாக ஓவர் ஆட்டம் போட்ட அந்த நடிகர் வசமாக சிக்கிக் கொண்டார் என்கின்றனர்.
பல பேர் லிஸ்ட்: இயக்குநரின் தம்பியும் பிரபல நடிகருமான இன்னொரு நடிகரும் கூடவே இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் நிலையில், மேலும் பல பேர் லிஸ்ட் ரெடியாகி வருவதாகவும் போலீஸ் வட்டாரத்தில் இருந்து எச்சரிக்கை மெசேஜ்கள் பரவி வருகின்றன. இதனால், நேற்று இரவு முழுவதும் பப்ளி நடிகை ஒருவருக்கு தூக்கமே போய்விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகருடன் நெருக்கம்: பட வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில், ஃபீல்ட் அவுட் ஆனாலும், தொடர்ந்து சென்னை ஈசிஆர் பார்ட்டிகளில் அந்த பப்ளி நடிகை அதிகம் தென்பட்டு வருகிறார் என்கின்றனர். மேலும், சிக்கிய நடிகருடன் மிகவும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் நடிகை இருந்து வந்தார் என்றும் அவரும் அதிகளவில் போதைப் பொருட்களை உட்கொண்டு வந்தார் என்றும் கூறுகின்றனர். நடிகரை தொடர்ந்து தானும் சிக்கி விடுவோமா என்கிற அச்சம் நடிகைக்கு அதிகளவில் உள்ளதாகவும், பெரிய புள்ளியை தொடர்பு கொண்டு இதிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
வாரிசுகளும் வாங்கியிருக்காங்களா?: சில பிரபலங்களின் வாரிசுகளும் இந்த போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கப் போவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. அதிகளவில் ஈசிஆர் பார்ட்டிகளில் பங்கேற்கும் பிரபலங்களை போலீசார் டார்கெட் செய்து விசாரிக்கப் போவதாகவும் பலரது ரத்த மாதிரிகளை சோதனை செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் பிரபலங்களை காப்பாற்றுவதற்கான வேலைகளும் ஜரூராக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











