தலைக்கு ஏறிய கோபம்.. அவ இதுக்கு மேல வாயை திறக்கக் கூடாது.. அந்த நடிகரிடம் ஆர்டர் போட்ட நடிகை?

By Staff

சென்னை: அந்த இசை பிரபலம் இஷ்டத்துக்கு பல பிரபலங்களை இழுத்து விட்டு பேசி வரும் நிலையில், அதில், தொக்காக அந்த பிரபல நடிகை சிக்கிக் கொண்டு அசிங்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், அந்த பிரபல நடிகரிடம் இதுதொடர்பாக போன் மூலம் முறையிட்டு இந்த பிரச்சனையை விரைவில் டைவர்ட் பண்ண வேண்டும் என ஆர்டர் போட்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

திருமணமே செய்யாமல் பல நடிகர்களுடன் படங்களில் லிப் லாக் உள்ளிட்ட படு நெருக்கமான காட்சிகளில் நடித்து வந்த அந்த பிரபல நடிகை சமீப காலமாக மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்தி வரும் சூழலில் திட்டமிட்டே நடிகையை கீழே தள்ளி விட வேண்டும் என்பதற்காக அந்த பாடகியை வைத்து பழைய கதைகளை எல்லாம் கிளறி விடுவதற்கு பின்னணியில் இன்னொரு பிரபல நடிகை இருக்கிறார் என்கின்றனர்.

Popular actress got tensed over her name gets damage in latest controversy

அந்த நடிகை குறித்து மட்டும் வாயே திறக்காமல் மற்ற பிரபலங்களை தொடர்ந்து டார்கெட் செய்து வருகிறார் அந்த இசை பிரபலம் எனக் கூறுகின்றனர். ஏற்கனவே இரண்டு நடிகைகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் தற்போது பெரிய போராகவே இது வெடித்துள்ளது பூகம்பத்தை கிளப்பி உள்ளது என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

ஆத்திரத்தில் நடிகை: தொடர்ந்து தன்னை மட்டும் டார்கெட் செய்து அந்த இசை பிரபலம் பேசி வருவது ஏன் என்கிற கடுப்பில் கண்கள் சிவந்து கோபத்தின் உச்சிக்கே அந்த நடிகை சென்று விட்டார் எனக் கூறுகின்றனர். பழைய குப்பையை எல்லாம் இப்போ கிளறி தனது இமேஜை டேமேஜ் செய்ய அவருக்கு பின்னணியில் இருந்து யார் தூண்டி விடுகிறார் என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் தூண்டிவிடும் நபரையும் தூண்டப்பட்ட நபரையும் உடனடியாக ஆஃப் செய்ய வேண்டும் என நடிகை முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

பிரபல நடிகருக்கு ஆர்டர்: இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய முடியுமோ செய்யுங்க என பிரபல நடிகரிடம் நடிகை முறையிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இனிமேல் தன்னை பற்றி ஒரு வார்த்தை அந்த இசை பிரபலம் தப்பா பேசக் கூடாது என்றும் உத்தரவு போட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மடைமாற்ற: இந்த விவகாரத்தை உடனடியாக மடைமாற்றுவதற்கான வேலைகளை அந்த பிரபல நடிகரின் டீம் ஆரம்பித்து விட்டது என்றும் இமிடியேட்டாக சில அறிவிப்புகள் வெளியாகி சீனையே மாத்தப் போவதாகவும் கூறுகின்றனர். மேலும், காசுக்காக மட்டுமே அந்த இசை பிரபலம் பேசி வருகிறார் என்றால் அவருக்கு காசை கொடுத்து வாயை அடைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X