ஏன் டாப் நடிகர்கள் என்னை ஓரங்கட்டுறாங்கன்னே தெரியல.. புலம்பித் தவிக்கும் மில்க் பியூட்டி!
சென்னை: மில்க் பியூட்டி நடிகையை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் ஓரங்கட்டி வருவதால் மிகவும் மனவேதனை அடைந்திருக்கிறாராம்.
ஏகப்பட்ட படங்களில் நன்றாக நடித்தும், பெரிய பெரிய கதாபாத்திரங்களை இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் செய்து வந்தாலும், பெரிய நடிகர்கள் தன்னை புக் செய்ய ஏன் தான் தயங்குகின்றனர் என்றே தெரியவில்லை என புலம்பி உள்ளாராம்.
அப்படி ஒருவேளை பெரிய நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டால், அதில் இயக்குநர்களின் பங்கு தான் அதிகம் இருப்பதாகவும் ஹீரோக்கள் தன்னை வேண்டாம் என ஏன் தான் சொல்கின்றனர் என தெரியாமல் அந்த பிரபல நடிகை புலம்பி வருகிறாராம்.

மில்க் பியூட்டி
பார்க்க அப்படியே பொங்கி வரும் பால் போல ஓவர் கலரில் இருக்கும் அந்த மில்க் பியூட்டி நடிகை இளம் வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தாலும், தென்னிந்திய சினிமா உலகில் அவருக்கு முதன்மை இடம் இதுவரை கிடைக்கவே இல்லை என்கிற குறை அவரது மனதை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது.

டாப் ஹீரோக்களுடன்
ஆரம்பத்தில் இளம் ஹீரோக்கள் படத்தில் நடித்து வந்த அந்த நடிகை அவ்வப்போது ஒரு சில முன்னணி ஹீரோக்கள் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்த படங்கள் பெரிதளவில் வெற்றி பெறாத நிலையில், தொடர்ந்து நடிகர்கள் அவரை புக் செய்வதை தவிர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

முதலிடம்
மற்ற நடிகைகளின் படம் ஓடுகிறதோ இல்லையோ அவர்கள் படம் வந்தாலே அவர்களுக்கான இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், எத்தனையோ வருடமாக நடித்து வந்தாலும், நேற்று வந்த நடிகைகளுக்கு கிடைக்கும் இடம் கூட தனக்கு கிடைக்க மாட்டேங்கிறதே என்கிற மன வருத்தத்தில் ரொம்ப அப்செட் ஆகி இருக்கிறாராம் அந்த நடிகை.

ஓவர் ஆக்டிங்
மில்க் பியூட்டி சாதாரணமாக நடித்தாலும் ஓவர் ஆக்டிங் என்றே சொல்லி அவர் நடிப்பை பலரும் தொடர்ந்து குறை சொல்லியே அவரை ஓரங்கட்டி விட்டதாகவும், ஆனால், தொடர்ந்து தானும் இதே துறையில் தான் அத்தனை விமர்சனங்களையும் கடந்து பணியாற்றி வருகிறேன் என்றும் அந்த நடிகை கூறியுள்ளார்.

மற்றவர்களுக்கு வாய்ப்பு
உச்ச நட்சத்திரங்களின் புதிய படங்களில் புது நடிகைகளுக்கும் முன்னாள் நடிகைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால், தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் ஒதுக்கி ஓரங்கட்டி விடுகின்றனர் என்றும் புலம்பித் தவித்து வருகிறாராம் அந்த மில்க் பியூட்டி.

விருதுகளும் இல்லை
சினிமாவில் தான் இப்படி செய்கின்றனர் என வெப் தொடரில் சோலோ பர்ஃபார்மன்ஸ் கொடுத்து அசத்தினாலும், அந்த நடிகையை யாருமே கண்டுகொள்ளவே இல்லையாம். மாறாக இன்னொரு பிரபல நடிகைக்கு விருதுகளும், அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவியவே இப்படி கடுப்பாகி இருக்கிறார் அம்மணி.

ஏன் திடீர்னு
சமீபத்தில் ஒரு பெரிய நடிகர் படத்தில் இரண்டாவது நாயகியாக கூட நடிக்கிறேன் என இவர் ஓப்பனாக கேட்டுப் பார்த்தும் அந்த படத்தில் இவரை விடுத்து இன்னொரு பிரபல நடிகையை புக் செய்து விட்டனராம். அதனால், தான் மில்க் பியூட்டி மிகவும் வருத்தமடைந்து காணப்பட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











