உச்சநடிகரை சீண்டி பார்க்கும் நடிகை.. தாங்க முடியாத சீன் தேவையா.. ஒரே புலம்பல்!
சென்னை: சமீபத்தில் ரூ.1 கோடி செட் போட்டு பட பூஜையெல்லாம் நடந்து நல்லபடியாக முடிந்தாலும், எங்கு பார்த்தாலும் நம்பர் நடிகையை பற்றித்தான் பேச்சு அடிபடுகிறது. நம்பர் நடிகை எது செய்தாலும் அதற்கு பின்னால் ஒரு நடிகரை சீண்டி பார்ப்பதை போல இருக்கிறதாம். கோலிவுட்டில் நல்ல பெயர் இருக்கிறது. புகழும் கிடைத்துவிட்டது இருந்தாலும் ஏன் இந்த நம்பர் நடிகைக்கு இப்படி ஒரு எண்ணம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
முதலிடம்: நடிகைகள் பலரும் போட்டிக்கு தயாராக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பப்போ நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதற்காக சில விசயங்களை அந்த நம்பர் நடிகை செய்து வருகிறாராம். ஏற்கனவே அவரை விமர்சித்த யூடியூப் தள விமர்சகர்களை குரங்கோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு பிறகு சற்று அமைதியானது. ஆனால், தன்னை பற்றி எதாவது பேச்சுக்கள் வரவேண்டும் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே விளம்பரம் படுத்திக்கொள்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஸ்டார் பட்டம்: டிரெண்டிங்கில் இருப்பதற்காக பெரிய அந்தஸ்தெல்லாம் வேணாம், நான் சொத்தா மதிக்கிற ரசிகர்கள் இருக்கும் போது எனக்கு எதற்கு பட்டம் என அறிக்கை விட்டார். ஆனால், நம்பர் நடிகை எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமாம். அந்த அறிக்கை ஒரு பெரிய ஹீரோவோட ஈகோவை சீண்டி பார்ப்பதற்கு தான் என அரசல் புரசலாக கிசுகிசுக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அவருடன் சேர்ந்து நடித்தபோதே உரசல் ஏற்பட்டுள்ளதாம். என்னதான் சூர்யவம்சம் ரேஞ்சுக்கு அறிக்கை விட்டாலும் ரசிகர்கள் இதை ஒரு பொருட்டாகூட மதிக்கவில்லை என்பதை கேட்டு நம்பர் நடிகை அப்செட்டில் இருக்கிறாராம். நமது ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாகிவிட்டதாக புலம்புகிறாராம்.
குடைச்சல்: உச்ச நடிகருடன் சேர்ந்து நடித்த படத்தில் தனது பெயருக்கு முன்னால் பட்டம் போட அடம்பிடித்தாராம். ஆனால், அதற்கு அந்த தயாரிப்பு நிறுவனம் தலைவணங்கவில்லை, நடிகைக்கு கோபம் வந்துவிட்டது. நம்பர் நடிகை கொடுத்த டார்ச்சரால் பட்டப்பெயரை தயாரிப்பு நிறுவனம் போட்டுள்ளது. இதை பார்த்தால் நானாக கேட்டு வாங்கிய பட்டம் இல்லை என்ற ரேஞ்சுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளாராம்.
ஹைலட் என்னன்னு பார்த்தால் எதுவும் நிரந்தரமில்லை எல்லாம் மாயை என்ற ரீதியில் பேசி இருக்கிறார்.
இது உச்ச நடிகரை கடுப்பேத்த தான் என்கின்றனர். இப்படி உள்குத்தோடு நடிகை செய்த வேலை கேலிக்கும் கிண்டலுக்கும் கூட ஆளாகி வருகிறது.
தொடர் பிளாப்: கோலிவுட்டில் பெரிய அந்தஸ்து வைத்திருந்தாலும் ஒரு படம் கூட ஓடவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்க தொடங்கியுள்ளன. பேர் புகழுக்கு ஆசைப்படாத இன்னொரு நம்பர் நடிகை தான் இப்ப டாப் கியரில் இருக்கிறாராம். கதையை தேர்ந்தெடுத்து தைரியமாக நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இருந்தாலும் நம்பர் நடிகை நாமதான் டாப்பு, படம் ஓடுவது 2ஆம் பட்சம் 100 கோடி வசூல் தான் டார்கெட் என கணக்கு போட்டு வருகிறார். ஹீரோயினை வைத்து ஹிட் கொடுக்கும் இயக்குநரும் 100 கோடி கன்பார்ம் என கூறியுள்ளதால் நம்பர் நடிகை செம ஹேப்பியாம். பொறுத்திருந்துதான் பாக்கனும். உச்ச நடிகர் மீது என்ன கோபம் என்று தான் எல்லோரும் கேட்கும் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











