காதலருடன் கடல் கடந்து டேட்டிங் செய்து வரும் கால் அழகி.. யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?
சென்னை: பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கால் அழகி தனது காதலருடன் கடல் கடந்து டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமா நடிகைகள் பப்ளிக்காக காதலர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் டேட்டிங் செல்லும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரொம்பவே கேஷுவலாக ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், இன்னமும் தனது காதலரை ரகசியமாக வைத்திருக்கும் அந்த கால் அழகி அவருடன் தான் டேட்டிங் சென்றுள்ளார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

ஆரம்பத்தில் சொதப்பல்
அழகும் இளமையும் கொண்டு சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த அந்த கால் அழகிக்கு ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பெரும் சொதப்பலாக அமைந்தது. முகத்தில் என்ன செய்தாலும் நடிப்பே வரவில்லையே என பலரும் அவரை கலாய்த்து ஓரங்கட்டத் தொடங்கினர்.

பெரிய படங்கள் கிடைத்தும்
ஆரம்பத்தில் இருந்தே சிபாரிசு மூலமாக பெரிய படங்கள் பல கிடைத்தும் அந்த நடிகைக்கு எதுவுமே கை கொடுக்காமல் எல்லாமே ஃபிளாப் ஆக ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நடிகை அதிர்ஷ்டம் இல்லாதவள் எனக் கூறி அவரை புதிய படங்களில் புக் செய்வதையே நிறுத்தி விட்டனர். இதனால் அப்செட்டான நடிகை மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் பறந்து வர தேவையான வேலைகளை செய்தார்.

பெரிய டிமாண்ட்
தோல்விகளில் துவண்டு விழாமல் மீண்டும் எழுந்து வந்த அந்த நடிகைக்கு சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க தற்போது கையிலே பிடிக்க முடியாத அளவுக்கு பெரிய பட்ஜெட் படங்களின் நாயகியாக படு டிமான்டாக அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.

காதலருடன் டேட்டிங்
ஷூட்டிங் முடிந்த உடனே காதலருடன் இரவு நேர பார்ட்டிகளில் தென்பட்டு வந்த அந்த நடிகை மாஸ் நடிகரின் படத்தின் ஷூட்டிங்கில் கிடைத்த சின்ன கேப்பில் காதலருடன் கடல் கடந்து டேட்டிங் செல்லவே கிளம்பி விட்டாராம். ஆனால், இதுவரை பொதுவெளியில் அவரை அறிமுகப்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட் பண்ண போட்டோக்கள்
காதலருடன் டின்னர் சாப்பிடும் போது எடுத்துக் கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களையும் அப்படியே ஷேர் செய்யாமல் அவரை மட்டும் கட் செய்து விட்டு தான் மட்டுமே இருக்கும் புகைப்படங்களை மட்டுமே ஷேர் செய்து வருகிறார் அந்த கால் அழகி.

யார் அந்த அதிர்ஷ்டசாலி
ஆனால், இதுவரை அவரை பொதுவெளியில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவதால் இப்போதைக்கு அது தேவையில்லாத பின்னடைவை கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது என சிந்தித்தே அவரை ரகசிய ஸ்நேகிதராக வைத்திருக்கிறாராம் அந்த பிரபல நடிகை.

விவாகரத்தான நடிகருடன் சேர்த்து
சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட அந்த பிரபல நடிகருக்கும் கால் அழகிக்கும் தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், கால் அழகி காதலருடன் டேட்டிங் செய்தும் அவரை வெளிப்படையாக காட்டாத நிலையில், அந்த நடிகர் தான் இவருடையா காதலரா? என்கிற சந்தேகமும் பூதாகரமாக கிளம்பி வருகிறது. ஆனால், இவர் வேறு ஒரு நபர் தான் என்றும் அந்த நடிகர் இல்லை என்றும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.

காதலருடன் டேட்டிங்
ஷூட்டிங் முடிந்த உடனே காதலருடன் இரவு நேர பார்ட்டிகளில் தென்பட்டு வந்த அந்த நடிகை தற்போது காதலருடன் கடல் கடந்து டேட்டிங் செல்லவே கிளம்பி விட்டாராம். ஆனால், இதுவரை பொதுவெளியில் அவரை அறிமுகப்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











