30 கோடி போச்சே.. பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டம்.. எல்லாம் அந்த விஷயம் தான் காரணமாம்!
சென்னை: பிரபல நடிகைக்கு வரவிருந்த 30 கோடி ரூபாய் வருமானம் அந்த ஒரு விஷயத்தால் கைக்கு வராமல் போய் விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணவரை கழட்டி விட்டு கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய அந்த பிரபல நடிகை கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சரக்கு விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு விளம்பரத்தில் போடாத ஆட்டம் போட்டு வந்தார்.
நடிகையின் ஹாட்னஸை பார்த்து பிரபல பிராண்ட் நிறுவனங்கள் சினிமாவை தாண்டி அவரை ஏகப்பட்ட விளம்பரங்களில் கமீட் செய்திருந்தனர். ஆனால், கடைசியில் நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை காரணமாக எல்லாமே கை விட்டு போய் விட்டதாம்.

ஆடாத ஆட்டமெல்லாம்
குடும்பத்தில் இருந்து வந்த நிலையில், குடும்ப பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி சொகுசாக இருந்து வந்தார். கணவரின் அன்பும் அந்த நடிகைக்கு அதிகம் கிடைத்து வந்தது. ஆனால், திடீரென பாலிவுட் ஆசை நடிகைக்கு ஏற்பட்ட நிலையில், கணவர் பேச்சையும் கேட்காமல் ஆடாத ஆட்டமெல்லாம் போட ஆரம்பித்த நிலையில் தான் விவாகரத்தில் சென்று அவரது வாழ்க்கை முடிந்ததாக ஏகப்பட்ட பேச்சுக்கள் எழுந்தன.

சரக்கு விளம்பரம்
குத்தாட்டம் போட்ட நடிகை அடுத்து குட்டி டிரெஸ்ஸில் சரக்கு விளம்பரம் வரை நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பாலிவுட், ஹாலிவுட் என பெரியளவில் பறக்க நினைத்த அந்த நடிகைக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக எல்லாமே அப்படியே அடிபட்டு போய் விட்டதாக கூறுகின்றனர்.

பட வாய்ப்புகள் காலி
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பல ஏரியாக்களிலும் அந்த நடிகை நடிக்க வேண்டிய பல படங்கள் மற்ற நடிகைகளின் கைவசம் சென்று விட்டன. உடல்நலக் குறைவு காரணமாக படுத்த படுக்கையாகி விட்ட நடிகை மீண்டும் எழுந்து வந்த நிலையிலும் அவர் முன்பிருந்த அளவுக்கு நெடு நேரம் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாததால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் நடிகையை வைத்து எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லையாம்.

30 கோடி போச்சு
நடிகை ஸ்லிம் ஃபிட்டாக மாறி செம ஹாட்டாக ஏகப்பட்ட சர்வதேச விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில், மேலும், 30 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம். இந்நிலையில், தற்போது அத்தனை வாய்ப்புகளும் அவரை விட்டு மற்ற பாலிவுட் நடிகைகளுக்கு சென்று விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மனக்கஷ்டத்தில் நடிகை
பெரியளவில் சாதிக்க வேண்டும் என சிறகை விரித்து பறக்க துடித்த நடிகைக்கு இப்படி அடிமேல் அடி விழுந்து விட்டதே என்றும் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என ரொம்பவே கதறி கதறி மனக்கஷ்டத்தில் நடிகை அழுது புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











