For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாடகைத்தாய் மேட்டரை ஆரம்பித்த வாரிசு நடிகை.. ஆளவிடும்மா சாமி என ஓட்டம் பிடித்த காதலர்!

  By Staff
  |

  சென்னை: அந்த பிரபல வாரிசு நடிகைக்கும் உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது வெளிப்படையாக தெரிய வந்த நிலையில், அவருடைய காதலர் சைலன்ட்டாக கம்பி நீட்டி விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்து உள்ளன.

  பண்டிகை காலத்துக்கெல்லாம் இந்நேரம் தனது காதலருடன் ஏகப்பட்ட கொண்டாட்ட போட்டோக்களை போட்டிருக்க வேண்டிய அந்த நடிகை சோலோவாக சோக ராகம் பாடி வருவதற்கு பின்னணியில் இப்படியொரு பயங்கர்மான மேட்டர் இருப்பதாக கூறுகின்றனர்.

  வாடகைத்தாய் மேட்டரை நடிகை கையில் எடுத்தது தான் காதலர் அவரை கழட்டிவிட காரணம் என புகையத் தொடங்கி உள்ளன.

  கமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவுகமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவு

  ராசியில்லாத நடிகை

  ராசியில்லாத நடிகை

  பிரபல வாரிசு நடிகையான அவருக்கு ஏகப்பட்ட தனித் திறமைகள் இருக்கின்றன. ஆனால், சினிமாவில் அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தையே இழந்து சில காலம் சினிமாவை விட்டே விலக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

  மன அழுத்தம்

  மன அழுத்தம்

  ஆரம்பத்தில் படு ஜாலியாகவே தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்த அந்த நடிகை முதல் காதலர் விட்டுச் சென்ற மன வருத்தம் காரணமாக ரொம்பவே அப்செட்டில் இருந்து வந்தார். அந்த சூழ்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட மனவருத்தம் ஏற்பட்டதாகவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் வந்ததாகவும் அவரே சில பேட்டிகளில் பேசி அதிர்ச்சியடைய வைத்தார்.

  காதலருடன் ஜாலி

  காதலருடன் ஜாலி

  மீண்டும் அந்த நடிகையை காதலிக்க ஒருத்தர் கிடைத்த நிலையில், அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையே வாழ்ந்து வந்தார் அந்த பிரபல நடிகை. இருவரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் குறும்புத்தனங்கள் நிறைந்த புகைப்படங்களை மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் போட்டு கொஞ்சி வந்தனர்.

  உளறிய நடிகை

  உளறிய நடிகை

  எல்லாமே நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனக்கு அந்த இடத்தில் இருக்கும் பிரச்சனை பற்றி நடிகை வெளிப்படையாக உளறிவிட்டார். இதை அறிந்ததும் இதற்காகத்தான் இத்தனை நாட்களாக அந்த விஷயத்தை மட்டும் தள்ளிப் போட்டு வந்தாயா என காதலர் கேட்டு, தன்னிடம் உண்மையை சொல்லாமல் ஏன் இதுவரை மறைத்தாய் என சண்டை பிடித்து விட்டாராம்.

  வாடகைத்தாய் ஐடியா

  வாடகைத்தாய் ஐடியா

  நாம இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். எனக்கு நீ வேண்டும், உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியாது என நடிகை பேச்சை எடுத்த நிலையில், அய்யோ ஆளவிடும்மா சாமி என காதலர் ஆளே எஸ்கேப் ஆகிவிட்டார் என்கிற பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.

  சோகத்தில் நடிகை

  சோகத்தில் நடிகை

  இரண்டாவது காதலரும் தனது அந்த பிரச்சனை பற்றி அறிந்ததும் விட்டுச் சென்று விட்டாரே என்கிற மன வலியில் நடிகை துடிதுடித்து வருவதாக கூறுகின்றனர். இப்படி ஒரு பக்கம் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இன்னொரு புறம் நடிகையும் அவரது காதலரும் தங்கள் வேலையில் சமீப காலமாக பிசியாக இருப்பது தான் இதற்கு காரணம் என்றும் சீக்கிரமே இருவரும் ஒன்றாக சேர்ந்து போட்டோக்களை வெளியிடுவர் என்றும் கூறுகின்றனர்.

  English summary
  Popular actress love breaks up due to surrogacy issue shocks everyone. Talented actress gets very upset after her boy friend flew away from her with after knowing about her health issues.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X