காப்பி இயக்குநர் செயலால் கடுப்பான நம்பர் நடிகையின் காதலர்.. கிளியை விட்டா பறந்திடுமே என்கிற பயமா?
சென்னை: நம்பர் நடிகையை தனது லக்கி சார்மாக பார்த்து வரும் காப்பி இயக்குநர் அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
ஆனால், அதனால் நமக்குத் தானே பின் விளைவுகள் அதிகமாக ஏற்படும் என்கிற பயம் காதலருக்கு அதிகமாக வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
மேலும், நம்பர் நடிகையின் வளர்ச்சிக்கு காப்பி இயக்குநர் செய்யும் உதவிகளையும் காதலர் முடக்கி வருவதாக பகீர் கிளப்பும் பல தகவல்கள் கசிந்துள்ளன.

இன்னுமொரு 5 ஆண்டுகள்
மார்க்கெட் மற்றும் மவுசு உள்ளவரை தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கும் நம்பர் நடிகை இன்னுமொரு 5 ஆண்டுகளுக்கு தனக்கு நிச்சயம் மார்க்கெட் டவுன் ஆகாது என்கிற உறுதியுடன் அந்த விஷயத்தை தெளிவாக தவிர்த்து வருகிறார். ஆனால், இயக்குநருக்கோ ஏற்கனவே பல காலம் கடந்து விட்டதே என்கிற வருத்தம் எப்போதும் அவரை துன்புறுத்திக் கொண்டே இருக்கிறதாம்.

காப்பி இயக்குநருக்கு ஆசை
கூட பிறக்காத சகோதரியாகவும் தனது லக்கி சார்மாகவும் அந்த நடிகையை பார்த்து வரும் காப்பி இயக்குநர் அவரது புகழ் தென்னிந்தியாவில் மட்டும் முடங்கி விடக் கூடாது என வட இந்தியாவிலும் பரவி பான் இந்திய நடிகை என்கிற அந்தஸ்த்தை அவர் பெற வேண்டும் என்கிற ஆசை அந்த இயக்குநருக்கு அதிகமாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே தனது படத்திலும் அவரை இணைத்துக் கொண்டார்.

டஜன் கணக்கில்
சமத்து நடிகையும் வட இந்தியா மார்க்கெட்டை டார்கெட் செய்துள்ள நிலையில், நம்பர் நடிகை அங்கே பிரபல நடிகையாக மாற்றும் முயற்சியில் காப்பி இயக்குநரே நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறாராம். பல நிறுவனங்களுடன் சந்திப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடிகையின் தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்து அசந்து போனவர்கள் டஜன் கணக்கில் படங்களை குவிக்க ரெடியாகி விட்டார்களாம்.

கடிவாளம் போடும் காதலர்
என்னது டஜன் கணக்கில் படங்கள் குவிந்தால் நாம் நினைத்தது நடக்க இன்னும் பல வருடங்கள் ஆகிவிடுமே என்கிற பயம் காதலருக்கு ஆழமாக வந்து விட்டது. மேலும், நடிகையை கடிவாளம் போடும் விதமாக அவருக்காக குவியும் வட இந்திய படக் கதைகள் சரியில்லை என குறை கூறி பல படங்களை நிராகரிக்க வைத்து வருகிறாராம்.

பிரச்சனை வருமா
ஏற்கனவே கணவர் நடிகர் கடிவாளம் போட்டதால் தான் ஒரு நடிகை விவாகரத்து கேட்டு கம்பியை நீட்டி விட்டார் என்பதையும் நன்கு அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் காதலர் இந்த விவகாரத்தில் எந்தவொரு பிரச்சனையும் மனக்கசப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக பக்குவாமாக பல விஷயங்களை செய்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











