Don't Miss!
- News
தேடி வந்த காலம் போய் ஆதரவை தேடி ஓடும் காலம் வந்துவிட்டதே.. அதிமுக குறித்து பூங்குன்றன் வேதனை
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
தனிப்பட்ட பகையை.. இண்டஸ்ட்ரி பகையா மாத்திட்டான்.. முன்னாள் காதலரை திட்டித் தீர்த்த கிரிஞ்ச் நடிகை!
பெங்களூரு: சிரிக்க சொன்னாக்கூட ஓவர் ஆக்டிங் பண்ணும் அந்த நடிகையை ரசிகர்கள் கிரிஞ்ச் நடிகை என்றே கிண்டல் செய்து வருகின்றனர்.
எப்படி ட்ரோல் செய்தாலும் இப்போதைக்கு அந்த நடிகை தான் ஆல் இந்தியா அளவில் அனைத்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
திடீரென ஒரு இண்டஸ்ட்ரியே நடிகைக்கு எதிராக கிளம்ப எல்லாத்துக்கும் காரணம் தனது முன்னாள் காதலன் தான் என திட்டித் தீர்த்து இருக்கிறாராம் அந்த நடிகை.
எழுந்து
நிற்க
கூட
முடியல..
வெளியே
தெரிஞ்சா
மொத்தமா
போயிடும்..
சீக்ரெட்டாக
சிகிச்சை
எடுக்கும்
நடிகை!

திருமணத்துக்கு நோ
பிரபல நடிகரின் படத்தில் அறிமுகமான அந்த நடிகைக்கும் நடிகருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கே சென்று விட்டனர். ஆனால், நடிகரின் சில கண்டிஷனுக்கு சம்மதம் இல்லாத நிலையில், நடிகை திடீரென அந்த திருமணத்தையே நிறுத்தி விட்டு தனது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.

கடுப்பான காதலர்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என நடிகையின் அதிரடி செயலால் ரொம்பவே கடுப்பாகி விட்டார் அந்த காதலர். அதன் பின்னர், நடிகரை மட்டுமில்லாமல் அவர் அறிமுகமான இண்டஸ்ட்ரியிலேயே படங்களில் நடிக்காமல் மற்ற சினிமா துறையில் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், நேஷனல் லெவலில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.

பழைய பகை
தென்னிந்திய நடிகைகளிலேயே குறைந்த ஆண்டுகளில் அதிக ரசிகர்களை அள்ளிய நடிகையாக மாறிய அவர் தற்போது தன்னை அறிமுகப்படுத்திய துறையை டோட்டலாகவே மறந்து விட்டார் என பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு சமயம் வந்த உடனே நடிகையை பழிவாங்கி விட்டார் அந்த நடிகர் என எக்ஸ் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறார் அந்த நடிகை.

திரண்ட திரையுலகம்
சரியான நேரத்தில் அந்த முன்னாள் காதலர் பற்ற வைத்த தீ நடிகைக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகையே திரள வைத்துள்ளது. கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழலில் அப்செட்டான நடிகை எல்லாத்துக்கும் அவன் தான் காரணம் என உச்சகட்ட கோபம் அடைந்து திட்டி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

திட்டித் தீர்த்த நடிகை
சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தயாரிப்பாளர் நேரடியாகவே இனிமேல் இந்த இண்டஸ்ட்ரியில் நடிக்க மாட்டீங்களா? ரொம்ப பிகு பண்றீங்களாமே என கேட்டதற்கு அதெல்லாம் இல்லைங்க என ஒட்டுமொத்த கதையையும் சொல்லி அவருக்கு முன்பாகவே எக்ஸை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

நோ ரெட் கார்டு
நடிகைக்கு ரெட் கார்டு கொடுத்து முடக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக எழுந்து வருவதாக கட்டுக் கதைகளையும் அந்த முன்னாள் காதலர் ஆட்கள் தான் சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர் என்றும் எனக்கு ரெட் கார்டு எல்லாம் போட மாட்டாங்க, நான் எப்பவுமே எந்தவொரு இண்டஸ்ட்ரியையும் குறித்து தப்பா சொல்ல மாட்டேன் அதுவும் சொந்த இண்டஸ்ட்ரியை எங்கேயும் எப்போதும் விட்டுத் தரவே மாட்டேன் என தனது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்து வருகிறாராம்.

பிசினஸ் தான் முக்கியம்
தனிப்பட்ட பிரச்சனை காரணமாக நடிகையை அவ்வளவு சீக்கிரத்தில் முடக்க முடியாது என்றும் அவருடைய பிசினஸ் இப்போ பீக்கில் இருக்கும் நிலையில், அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தான் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு தடை செய்வதெல்லாம் முட்டாள்தனம் என்கிற பேச்சுக்களும் கிளம்பி வருகிறதாம்.
-
அடுத்த சீசனில் இனிமே பிஆர் பவர், அராஜக போட்டியாளர் தான் டைட்டிலை வெல்வார்களா? ரசிகர்கள் கேள்வி!
-
நல்லவங்களாவும் உண்மையாகவும் இருந்தா ஜெயிக்க முடியாது.. அசீம் வெற்றியை விளாசிய காஜல் பசுபதி!
-
Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்ற அசீம்.. மக்கள் நாயகன்!