விவாகரத்து பேச்சு அடிபடும் அளவுக்கு சென்ற விவகாரம்.. கணவன் போட்ட அந்த கண்டிஷன் தான் காரணமா?
சென்னை: பிரபல நடிகையை சுற்றி திடீரென விவாகரத்து பேச்சுவார்த்தைகள் அதிகரிக்க அவர் சமூக வலைதளங்களில் செய்த மாற்றம் தான் காரணமாக அமைந்துள்ளது.
ஆனால், அந்த நடிகை அப்படியொரு முடிவை எடுப்பதற்கு காரணம் அவரது கணவன் நடிகர் போட்ட அந்த ஒரு கண்டிஷன் தான் என்கிற ரகசிய தகவல் கசிந்துள்ளது.
பாலிவுட் பட வாய்ப்பு தேடல்களில் தன்னை மறந்து செயலாற்றி வரும் அந்த நடிகைக்கு லேசாக கடிவாளம் போட்டதன் விளைவாகத் தான் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சையில் சம்பாத்தியம்
சர்ச்சை கதையை தேர்வு செய்து நடித்ததன் மூலம் ஏகப்பட்ட சம்பளத்தை உயர்த்தி விட்டாராம் சமத்து நடிகை. தென்னிந்தியாவை விட்டு வடமாநிலங்களிலும் தனது கொடியை நாட்ட தவியாய் தவித்து வருகிறார். இந்நிலையில், திடீரென அவரை சுற்றி இப்படியொரு பூதம் கிளம்பி இருக்கிறது.

பிரேக்கப்
நடிகர் ஒருவருடன் டேட்டிங்கில் இருந்து இஷ்டத்துக்கு காதலித்து விட்டு, பின்னர் அவரை அழகாக கழட்டி விட்டு அந்த நடிகை பிரேக்கப் செய்து விட்டார் என அப்போதே மிகப்பெரிய சர்ச்சைகள் அந்த நடிகையை சுற்றி கிளம்பி இருந்த நிலையில், தற்போது மீண்டுமொரு பெரிய பிரச்சனை அவருக்கு மிகப்பெரிய தொல்லையாக அமைந்துள்ளது.

பெரிய இடத்து மாப்பிள்ளை
முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பெரிய இடத்து மாப்பிள்ளையை அழகாக வளைத்து போட்டு திருமணம் செய்து கொண்டு பக்காவாக செட்டில் ஆகி விட்டார் சமத்து நடிகை. திருமணத்திற்கு பிறகும் தனக்கு பிடித்த நடிப்பு தொழிலை விட மாட்டேன் என தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

படு ஆபாசமாக
பாலிவுட் வாய்ப்புகள் குவிவதால், திருமணம் ஆனதையும் மறந்து விட்டு படத்திற்கு தேவை என்றால் எந்த அளவுக்கு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிப்பேன் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வாய்ப்புகளை தேடி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த படு ஆபாசமான காட்சிகள் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரை ரொம்பவே அப்செட்டில் ஆழ்த்தி விட்டதாம்.

அதே போல
மேலும், தொடர்ந்து அதே போல ஏகப்பட்ட ஆஃபர்கள் அந்த நடிகைக்கு குவிவதால் நடிகையின் புகுந்த வீட்டார் மற்றும் கணவர் ஒவ்வொன்றையும் வேண்டாம் என ரிஜெக்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். ஒரு பெரிய படம் அதன் காரணமாக கை நழுவி போகவே நடிகைக்கு கோபம் வந்துவிட்டதாம்.

எல்லை மீறாதே
நடிகையின் அந்த கசமுசா காட்சிகள் மிகப்பெரிய அளவில் இணையத்தில் ஹிட் அடித்த நிலையில், ஏகப்பட்ட வாய்ப்புகள் அதே போல குவிந்து வருகிறதாம். இந்நிலையில், குடும்பத்தின் அழுத்தம் தாங்காமல் கடுப்பான காதல் கணவர், கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடி.. எல்லை மீறாதே என போட்ட சிறு கண்டிஷன் காரணமாகத்தான் இப்படியொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிடிக்காது
யாராவது அவர் மிகவும் விரும்பி நடித்து வரும் சினிமாவில் அப்படி நடிக்கக் கூடாது, இப்படி நடிக்கக் கூடாது என அட்வைஸ் பண்ணா அந்த நடிகைக்கு அது சுத்தமாகவே பிடிக்காதாம். இதன் காரணமாகத் தான் புகுந்த வீட்டின் பெருமையும் வேண்டாம், பெயரும் வேண்டாம் என கட் பண்ணி விட்டாராம்.

விவாகரத்து பேச்சுவார்த்தை
ஏற்கனவே விவாகரத்து ஆன நடிகரின் படத்தில் நடிகை நடித்து வருவதால், சினிமாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்கிற அறிவுரைகள் அவருக்கும் குவிந்து வருகிறதாம். இப்படியே போனால், பெயரை தூக்கியது போலவே ஆளையும் தூக்கிவிடுவார் என்றும் இப்போதைக்கு நடிகை முழுவதுமாக அந்த எண்ணத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.

பயத்தை காட்ட
ஆனால், அவர்களுக்கு சின்னதாக ஒரு பயத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி சமூக வலைதளங்களில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். தொடர்ந்து இதே போக்கு நீடித்தால் வேற மாறியான முடிவை நடிகை எடுக்க தயங்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











