அவன சும்மா விடவே மாட்டேன்.. யார ஏமாத்தப் பார்க்குறான்.. கழட்டிவிட்ட காதலனுக்கு செக் வைக்கும் நடிகை?

By Staff

சென்னை: பிரபல நடிகையை நைஸாக கழட்டி விட்ட இளம் நடிகரை தொடர்ந்து அந்த நடிகை துரத்தி வருவது தான் தற்போது திரையுலகில் மிகப்பெரிய பேச்சாக அடிபட்டு வருகிறது. சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலிப்பது, டேட்டிங் செய்வது என்பதெல்லாம் சாதாரண விஷயம் தான்.

ஆனால், நடிகருக்கோ, நடிகைக்கோ பிடிக்கவில்லை என்றால் பெரும்பாலும் விட்டு விடுவார்கள். சிலர் அந்த நடிகைகளை டார்கெட் செய்வது போல தொடர்ந்து சில குறியீடுகளை தங்கள் படங்களில் வைக்கத் தொடங்குவதும் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அந்த நடிகைக்காக உருகி உருகி எழுதிய பாடல்களை பைத்தியக்காரத்தனமாக பாடி வெறுப்பேற்றுவதும் என சீண்டி வருவார்கள்.

Popular actress plans to patch up with the Young hero after break up

ஆனால், பிரபல நடிகை ஒருவர் தற்போது தன்னை காதலித்து விட்டு ஏமாற்றிய நடிகரை அப்படி வெறுப்பேற்றி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டார்ச்சர் கொடுத்த நடிகை: அந்த நடிகரால் தனக்கு நல்ல வாழ்க்கை சினிமாவில் கிடைத்த நிலையில், மனசை பறிகொடுத்து விட்டாராம் அந்த நடிகை. அதன் பின்னர் ஓகே நடிகைக்கே சம்மதம் என்றால் நாமும் புகுந்து விளையாடலாம் என நினைத்த அந்த நடிகர் நடிகையுடன் ஜாலியாக டேட்டிங் எல்லாம் செய்து பல விளையாட்டுக்களையும் விளையாடி விட்டாராம். ஆனால், நெருங்கி பழகியதும் தான் அந்த நடிகருக்கு நடிகை எந்தளவுக்கு டார்ச்சர் கொடுப்பவர் என தெரிய வந்ததாம்.

ஆளை விடும்மா சாமி: நடிகையுடன் ஜாலியாக இருந்து விடலாம் என நினைத்த நடிகருக்கு தொடர்ந்து நடிகை கொடுத்த டார்ச்சர்கள் பிடிக்காத நிலையில், அவரை விட்டு பிரிந்து விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டு நடிகை போன் போட்டால் கூட தற்போதெல்லாம் எடுக்காமல் அவரை மொத்தமாகவே கழட்டி விட்டு விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்தன.

அவன சும்மா விடமாட்டேன்: ஆனால், அந்த நடிகை அந்த நடிகர் மீது பைத்தியம் பிடித்தது போல இருக்கிறாராம். வல்லவன் ரீமாசென் மாதிரி மாறிய நடிகை என்னை ஏமாத்தலாம்னு நினைக்கிறானா? அவன சும்மா விடமாட்டேன். எவ்ளோ தூரம் ஓடுவான்னு நானும் பார்க்கிறேன் என தொடர்ந்து அந்த நடிகருக்கு மறைமுகமாக எல்லாம் இல்லாமல் டைரக்ட்டாகவே பல செக்குகளை வைத்து வருகிறார் என்கின்றனர். இருவருக்கும் இடையே நடக்கும் இந்த பிரச்சனை எப்போ எப்படி வெடிக்கப் போகிறது என தெரியவில்லையே என நெருங்கிய சினிமா வட்டத்தினரே அச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X