கன்ட்ரோல் பண்ண கழட்டி எறிஞ்சுட்டு போயிட்டே இருப்பேன்.. கண்டிஷன் அப்ளையுடன் கல்யாணம் பண்ண நடிகை?
சென்னை: சமீபத்தில் 2வது திருமணம் செய்துக் கொண்ட நடிகை ஒருவர் கணவருக்கு பயங்கர கண்டிஷன் போட்டுத் தான் கல்யாணமே செஞ்சிக்கிட்டாரு என நெருங்கிய தோழிகளே கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர். மேலும், நடிகையின் சமீபத்திய செயல்கள் எல்லாம் ஆசைப்பட்டு திருமணம் செய்துக் கொண்ட நபருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
ஆரம்பத்தில் இருந்தே அந்த நடிகை கொஞ்சம் ஓவர் ஆட்டிட்யூட் ஆன நபர் தானாம். அதனால் தான், அவருக்கும் அவரது முதல் கணவருக்கும் ஒத்துப்போகாமல் இருந்து வந்தது என்றும் ஏகப்பட்ட சண்டைகள் வெடித்து வந்த நிலையில், இருவரும் பிரிந்து விடவே முடிவு செய்தனர் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், நடிகை தான் வேண்டும் என மோகம் காரணமாக நெருங்கி பழகிய பிரபலத்துக்கு தற்போது கொஞ்ச நேர சுகத்துக்காக இப்படி வந்து சிக்கிக் கொண்டோமே என்கிற ஃபீலிங் சில மாதங்களிலேயே வந்துவிட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
முதல் கண்டிஷனே இதுதான்: தனக்கு தாராளமான நடிப்புத் திறமை உள்ளது என்றும் நான் நடித்தாலே கோடிக் கணக்கில் ரசிகர்கள் பார்க்க ரெடியாக உள்ளனர். தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று பணம் கொடுக்க ரெடி என்கிற மமதையின் காரணமாக தன்னை எந்தவகையிலும் கன்ட்ரோல் பண்ணக் கூடாது என்கிற முதல் மற்றும் இறுதி கண்டிஷனை போட்டுத்தான் திருமணம் செய்துக் கொண்டாராம்.
கழட்டி எறிஞ்சுட்டு போயிடுவேன்: நாக்கை உயர்த்தி பேசினாலும், தன்னை கட்டுப்படுத்த எந்த வகையிலாவது முயற்சி செய்தாலோ கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சுட்டு போயிட்டே இருப்பேன் என்றும் 2வதாக உன்னை கல்யாணம் பண்ண தெரிஞ்ச எனக்கு 3வது கல்யாணம் பண்ணத் தெரியாதா என்ன? என்றும் அதிரடியாக பேசிவிட்டு அனைத்துக்கும் ஆடு போல அந்த நபர் தலையை ஆட்டிய நிலையில் தான் திருமணமே பண்ணிக் கொண்டாராம்.
இப்போ வருத்தப்பட்டு: ஆனால், திருமணம் ஆன சில வாரங்களிலேயே நடிகையுடனான வாழ்க்கையில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாத நிலை அந்த பிரபலத்துக்கு வரத் தொடங்கியிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், நடிகையின் ரூட் தாறுமாறாக செல்வதை பார்த்து வாய் வரைக்கும் வார்த்தை வந்தாலும், அப்படியே உள்ளுக்குள்ளே விழுங்கிக் கொள்கிறார் என்றும் இது என்னைக்கு வெடிக்கப் போகுதோ தெரியல? என நடிகையின் நெருங்கிய தோழிகள் சிலர் பேசிக் கொண்ட தகவல்கள் கசிந்த நிலையில், சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பற்றைக் கொண்டது.


Click it and Unblock the Notifications











