Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சம்பளத்தை வேணா குறைச்சிக்கிறேன்.. சான்ஸ் கொடுங்கன்னு கேட்ட நடிகை.. ஓட்டம் பிடித்த தயாரிப்பாளர்!
சென்னை: தனது நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்த படம் செல்ஃப் எடுக்காத நிலையில், புதிதாக பட வாய்ப்புகளே நடிகையின் பக்கம் வரவில்லையாம்.
முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஹீரோயின் என்கிற டேக் உடன் பந்தா பண்ணி வந்த அந்த பக்கத்து ஸ்டேட் நடிகையை தற்போது யாரும் சீண்டுவது கூட இல்லையாம்.
ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை போட்டு வந்தாலும், நடிகையின் நடிப்பு நல்லா இல்லாத நிலையில், இன்ஸ்டாகிராமில் கூட ஒரு ஈ, காக்கா கூட வருவதில்லை என்பதால் நடிகை ரொம்பவே உடைந்து போயுள்ளார்.
எப்படி எல்லாமோ ஐஸ் வைக்கும் ஒல்லி நடிகை.. மீண்டும் சிக்குவாரா அந்த மாஸ் ஹீரோ.. கோலிவுட் கிசுகிசு!

உஷாரான பிற மாநிலங்கள்
இந்த நடிகையை புக் செய்தால் படம் சொதப்பும் என்பதை புரிந்து கொண்ட பிற மாநில இயக்குநர்கள் நடிகையை பக்கத்திலேயே சேர்ப்பது இல்லையாம். அப்படியொரு சூழலில் தான் கோலிவுட்டில் ஏமாந்த பல பேர் இருக்காங்க, கவர்ச்சியை காட்டினால் போதும் சான்ஸ் கிடைக்கும் என நடிகைக்கு அட்வைஸ் கொடுக்க அவரும் இங்கே கிளம்பி வந்து விட்டார்.

கொஞ்சம் நடிங்க மேடம்
நடிகையின் பேக்ரவுண்ட் பில்டப்புகளை பார்த்து சில பிரபல நடிகர்கள் படங்களில் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்களில் இயக்குநர்கள் அந்த நடிகையிடம் பட்ட கஷ்டம் தான் பெரும்பாடு என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. திரையில் நடிகையின் நடிப்பை பார்த்த ரசிகர்களும், பேய் அறைந்தது போல மந்திரிக்க மசூதிக்கு சென்று விட்டார்களாம்.

படு தோல்வி
முதல் இரு படங்கள் நடிகர்களால் தப்பித்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் நடிகையின் நடிப்பில் வெளியான அந்த ஓடிடி காவியம் அப்படியொரு படமே வந்ததா? என்கிற கேள்வியை ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு படு தோல்வியை சந்தித்து வந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டதாம். அந்த படத்தில் நடிக்க சொன்னால், ஆடியன்ஸ் வேலையை நடிகை பார்த்ததால் அவரை புக் செய்ய மற்ற இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ரொம்பவே யோசித்து வருகிறார்களாம்.

சம்பளம் குறைப்பு
இந்த ஸ்டேட்டிலும் நம் நடிப்பு லட்சணத்தை கண்டு பிடித்து விட்டார்களே என நினைத்த அந்த நடிகை தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாகவும், தாராளமாக கவர்ச்சி காட்டுவதாகவும் கூறி சில தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளாராம். ஆனால், ஆள விடு தாயே என அவர்கள் தெறித்து ஓடி விட்டதாக தற்போது ரகசிய தகவல்கள் லீக் ஆகி உள்ளன.