நம்பர் நடிகையால் தப்பித்த உச்ச நடிகர்.. வரம் கிடைத்தும் வட போச்சே.. என்ன கொடுமை சரவணா?
சென்னை: உச்ச நடிகரின் படத்தில் இருந்து இயக்குநரை விலக்கினால் அவருடைய இமேஜ் பாதிக்கும் என்பதால், நீங்களே வெளியேறிடுங்க என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவே கோலிவுட்டில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இயக்குநர் பார்த்த வேலை தான் என்கின்றனர்.
பாஸ் நடிகருடன் உச்ச நடிகர் இணையலாமா? வேண்டாமா? என்றே பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருக்க, தொடர்ந்து தொல்லை பண்றாரே என நினைத்து ஓகே சொல்லியிருக்கிறார் உச்சம். ஆனால், அவர் நினைத்தபடி நல்ல கதை மற்றும் இயக்குநரை பாஸ் நடிகரால் அவசரகதியில் கொண்டு வந்து நிறுத்த முடியவில்லையாம்.

இதற்கிடையே சிஷ்ய புள்ளை ஏற்கனவே நமக்கு பண்ணது போதும் என ஒதுக்கிய நிலையில், நண்பரின் மனம் புண்பட வேண்டாம் என வேற யாரை காட்டினாலும் ஓகே என்கிற மனநிலையில், தான் அந்த இயக்குநருக்கு சம்மதம் தெரிவித்தார் உச்சம் என்கின்றனர்.
இதை நக்க மறந்துட்டீங்க: விவேக் காமெடியில் வருவது போல இதை டேஸ்ட் பண்ணிப் பாருங்க என சமீபத்தில், தன்னால், பெரிய பட்ஜெட் படங்களை கையாள முடியும் என டைரக்டர் போட்ட சீனில் தான் சிக்கிக் கொண்டார் என திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. நம்பர் நடிகையை வைத்தே பொம்மை படம் போல ஒரு படத்தை உருட்டி வைத்து இருக்கிறார் டைரக்டர் என்பதை புரிந்துக் கொண்டு தான் நமக்கு இவர் செட்டாக மாட்டார் என கட் அண்ட் ரைட்டாக நண்பரின் காதை உச்சம் கடித்து விட்டாராம்.
நம்பர் நடிகையால் எஸ்கேப்: வேறு வழியில்லாமல் எப்படி சிக்கியிருக்கேன் பாருங்க என நம்பர் நடிகை சொல்லாமல், அவரது படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளே உச்சத்தை உஷார் படுத்திய நிலையில் தான் கண்டிப்பாக இவர் ஃபார்மில் இல்லை என்றும் முன்னதாக காமெடி நடிகரை வைத்தும் மரண மொக்கை போட்டிருந்தார் இவர் என ஏகப்பட்ட உளவுத்துறை தகவல்களை கேட்டறிந்த உச்சம் இவரால் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்த நிலையில் தான் இப்படியொரு பஞ்சாயத்து வெடித்துள்ளதாக கூறுகின்றனர்.
வரம் கிடைத்தும் வட போச்சே: தேவையில்லாமல், அந்த படக் காட்சிகளை காட்டாமலே வெறும் கதை மூலமாகவே பில்டப் செய்தே படப்பிடிப்புக்கு சென்றிருக்கலாமோ என்று டைரக்டரும் அவசரப்பட்டு விட்டோமே என வருத்தப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











