உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி.. ஆனால், இனிமே சேர வேண்டாம்.. எக்ஸ் கணவருக்கு நோஸ் கட் கொடுத்த நடிகை!

By Staff

சென்னை: உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாகவே நடிகை வாடி வரும் தகவல் முன்னதாகவே தெரிந்தும் கூட எட்டிப் பார்க்காத எக்ஸ், மீடியாவுக்கு விஷயம் தெரிந்ததும் விசாரித்தது நடிகையை மனதளவில் ரொம்பவே பாதித்து விட்டது என்கின்றனர்.

ஏற்கனவே உருகி உருகி காதலித்த கணவர் தனது லட்சியத்திற்கு தடையாக இருந்த நிலையில் தான் அந்த பிரிவே ஏற்பட்டது என்கிற மனவேதனையில் இருந்து மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக இந்த சம்பம் அரங்கேறி இருக்கிறது.

என்கூடவே வந்துடு நான் பார்த்துக்கிறேன் என வெறும் வாய் வார்த்தையாகவே எக்ஸ் சொன்னதை புரிந்து கொண்ட நடிகை போதும்டா சாமி, ஆளவிடு என அதிரடியாக சொல்லி விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகையை தவிக்கவிட்டு

நடிகையை தவிக்கவிட்டு

சில காதல்கள் தோல்வி அடைந்த நிலையில், தன்னை ரொம்பவே அந்த நடிகர் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார் என நினைத்த நடிகை அவரை மனதார உருகி உருகி காதலித்து வந்தார். ஆனால், கடைசியில் நடிகையை தவிக்கவிட்டு நடிகர் விலகியது பெரும் பாதிப்பை அந்த நடிகைக்கு ஏற்படுத்தியது.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு


பாலிவுட், ஹாலிவுட் போக வேண்டுமென தீவிரமாக தன்னை தயார் படுத்தி வந்த அந்த நடிகைக்கு திடீரென மிகப்பெரிய வேகத்தடையாக அவருக்கு புதிய நோய் பாதிப்பு ஏற்பட்டது. எழுந்தே நடக்க முடியாத நிலை எல்லாம் உருவாகி விடும் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், கடந்த சில மாதங்களால் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் அந்த நடிகை.

எக்ஸுக்கு அக்கறையில்லை

எக்ஸுக்கு அக்கறையில்லை

எக்ஸ் கணவருக்கு முன்பே நடிகையின் உடல்நலம் குறித்த விஷயம் தெரிந்த நிலையிலும், அவரை சென்று சந்திக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், திடீரென நடிகையே பொதுவெளியில் அறிக்கை வெளியிட்ட நிலையில், மற்றவர்கள் கேட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தால் நடிகையை சென்று சந்தித்து இருக்கிறாராம்.

மனதார கேட்கவில்லை

மனதார கேட்கவில்லை

சும்மா ஒரு பேச்சுக்கு, என்கூடவே வந்துவிடு நான் வைத்து கவனித்துக் கொள்கிறேன் என உறவினர்களுக்கு முன்பாக நடிகர் கேட்டதை புரிந்து கொண்ட நடிகை அவரும் நாசுக்காக நடிகரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் என பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

எக்ஸுக்கு நோஸ்கட்

எக்ஸுக்கு நோஸ்கட்

ஒன்றும் வேண்டாம்.. விசாரித்ததற்கு நன்றி, என்னை நான் பார்த்துக்கிறேன் என எக்ஸுக்கு நோஸ் கட் கொடுத்து விட்டார் அந்த நடிகை என கூறுகின்றனர். முன்னதாக ஜீவனாம்சம் கூட தேவையில்லை என தூக்கி எறிந்து வந்த அந்த நடிகை இப்பவும் அதே மன தைரியத்துடன் இருந்து வருகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் நடிகையை பாராட்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X