காசு அதிகமாக கொடுத்தா அந்த சீன்ல கூட நடிப்பேன்.. பேபி நடிகை என்ன இப்படி மோசமா இறங்கிட்டாரு?

By Staff

சென்னை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற பேபி நடிகை எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி நடிக்க ஆரம்பித்துள்ளார். தென்னிந்திய படங்களில் உங்களை இப்படி பார்க்க முடியவில்லையே என சில சினிமா நண்பர்கள் கேட்டதற்கு நடிகையிடம் இருந்து வெளிவந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பட வாய்ப்புகள் திடீரென தென்னிந்தியாவில் நடிகைக்கு குறைந்து விட்ட நிலையில், மும்பையிலேயே சொந்தமாக வீடு வாங்கி தனியாக குடித்தனமே நடத்தி் வருகிறார் நடிகை என்கிற கிசுகிசுக்களும் கிளம்பியுள்ளன.

gossip kollywood

எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற வெறியுடன் டே நைட் உழைத்து வரும் நடிகைக்கு இன்னமும் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதால் உச்சகட்டமாக நடிக்கவும் தான் ரெடி என்கிற முடிவுக்கே வந்துவிட்டார் என்கின்றனர்.

நடிப்பு தான் முக்கியம்: திருமண வாழ்க்கை செட்டாகாத நிலையில், இனிமேல் சினிமா ஹீரோயினாக உச்சம் தொடவேண்டும் என்றும் ஹாலிவுட் வரை சென்று தனது கொடியை நாட்ட வேண்டும் என்கிற வெறியுடன் நடிகை ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். சவுத்தில் நடிகையின் மார்க்கெட் திடீரென சரிந்துவிட்ட நிலையில், புதிதாக நடிகையை புக் செய்ய நினைப்பவர்கள் அவரது சம்பளத்தை பாதியாக குறைத்து விட்ட நிலையில் தனக்கான இடம் மும்பை தான் அங்கேயே முகாமிட்டுள்ளாராம் நடிகை. எப்படியாவது பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக மாறிவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.

தென்னிந்திய நடிகைகள் வைத்த செக்: ஆனால், பேபி நடிகை ரெஸ்ட் எடுத்த கேப்பில் அவார்டு நடிகை முதல் ஆட்டக்காரி நடிகை வரை பல தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் சீட் பிடித்து பல பெரிய படங்களில் நடித்து வருகின்றனர். சினிமா ரொம்பவே மாறிவிட்டது என்றும் கொஞ்சம் தூங்கினாலும் மற்றவர்கள் வாய்ப்புகளை தட்டிச் சென்றுவிடுகின்றனர் என்றும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

எந்த எல்லைக்கும் ரெடி: குறைந்த சம்பளத்துக்கு சாதாரண படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் பெரிய சம்பளத்துடன் ரிஸ்க்கான படங்கள் வந்தால் எந்த எல்லைக்கும் சென்று நடிக்கத் தயார் என்றும் தற்போது தன்னை தட்டிக் கேட்கவும் கட்டிப் போடவும் யாருமே இல்லை என சினிமா நண்பர்களிடம் பேசும் போது ஓபனாக தனது எண்ணத்தை பேபி நடிகை போட்டு உடைத்திருக்கிறாராம்.

இறங்கி அடித்தால் காலி: பேபி நடிகையை பற்றித் தெரிந்த மற்ற நடிகைகள் அவர் இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டால் நம்ம நிலைமை எல்லாம் மோசமாகிவிடும் என பயப்பட ஆரம்பித்துள்ளதாக பாலிவுட்டில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. வெப்சீரிஸில் காட்டிய கவர்ச்சியை விட சீக்கிரமே உச்சகட்ட கவர்ச்சியை காட்டி நடிக்க போகிறார் பேபி நடிகை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X