தாராளமா நடிக்கிறேன்.. கொஞ்சம் தயவு பண்ணி சான்ஸ் கொடுங்க.. படங்கள் இல்லாததால் சட்டென இறங்கிய நடிகை!

சென்னை: அந்த வோர்ல்ட் நடிகரின் படத்தை தவிர வேறு எந்த புதிய படங்களிலும் அந்த பிரபல நடிகை புக் ஆகவில்லை.

இதனால், தனது சமூக வலைதள பக்கங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி வாய்ப்புத் தேட அந்த பிரபல நடிகையும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் இறங்கியுள்ளாராம்.

கடந்த ஆண்டு அண்ணன், தம்பி என இருவர் படங்களில் நடித்தும் எந்த படமும் ஓடாததால் அடுத்தடுத்த படங்களும் அம்மணிக்கு கிடைக்கவில்லை.

செம்ம அழகு

செம்ம அழகு

அந்த பிரபல நடிகைக்கு அழகில் குறைவில்லை. செம்ம அழகாக இருக்கிறார். ஆனால், நடிக்கத்தான் வரமாட்டேங்குது என இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். ஆனால், தான் நல்லாத்தான் நடிக்கிறேன் என்றும் கதைகள் தான் சரியாக அமையவில்லை என பதிலுக்கு தோசையை திருப்பி போட்டு வருகிறார் அந்த ஸ்ரீதேவி நடிகை.

செட் ஆகலை

செட் ஆகலை

கோலிவுட்டில் இதுவரை அந்த நடிகை நடித்த படங்களில் ஒரே ஒரு படம் மட்டும் தான் தப்பித்தது. மத்தபடி எந்தவொரு படமும் ஓடவில்லை. இதனால், கோலிவுட் தனக்கு செட் ஆகலை என டோலிவுட் மற்றும் பாலிவுட்டிற்கு படையெடுத்தும் பார்த்து விட்டார் அந்த பிரபல நடிகை.

அங்கேயும் செம அடி தான்

அங்கேயும் செம அடி தான்

ஆனால், மற்ற மொழிப் படங்களிலும் அந்த ஸ்ரீதேவி நடிகைக்கு நினைத்த படி வெற்றிகள் கிடைக்கவில்லை. எந்த மொழிப் படங்களில் நடித்தாலும், தன்னுடைய படங்கள் ஏன் ஓட மாட்டேங்குது என்றும் வருத்தத்தில் புலம்பி வருகிறார் அந்த அன்பான நடிகை.

ஓவர் எதிர்பார்ப்பு

ஓவர் எதிர்பார்ப்பு

எப்படியாவது முன்னணி ஹீரோயினாக வேண்டும் என ஓவர் எதிர்பார்ப்பில் சரியான கதைகளை தேர்வு செய்யாமல் நடித்ததன் விளைவே அவரது தோல்விகளுக்கு காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தேசபக்தி படம்

தேசபக்தி படம்

அம்மணிக்கு அந்த தேசபக்தி தான் கைகொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றும் கோலிவுட்டில் வைரலாக கிசுகிசுத்து வருகின்றனர். அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றால், ஒரே அடியாக ஓரங்கட்டி விடுவார்கள் என்ற பயமும் அம்மணிக்கு தொற்றிக் கொண்டுள்ளது.

பெரிய ரோல் இல்லை

பெரிய ரோல் இல்லை

ஆனால், அந்த தேசபக்தி படத்திலும் அம்மணிக்கு பெரிய ரோல் எல்லாம் இல்லை. ஏற்கனவே அந்த படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடித்து வருவதால், சின்ன ரோல் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அதுவும் படத்தில் கொஞ்ச நேரம் தான் அந்த ஸ்ரீதேவி நடிகை வந்து செல்வாராம்.

கிளாமர் பக்கம்

கிளாமர் பக்கம்

அந்த வோர்ல்ட் நடிகர் படத்தை தவிர கையில் எந்த புதிய படமும் இல்லாத நிலையில், கிளாமர் பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறார் அந்த பிரபல நடிகை. தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தான் தாராளமாக நடிக்க ரெடி என இயக்குநர்களுக்கும், இளம் ஹீரோக்களுக்கும் சிக்னல் கொடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X