For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செகண்ட் மேரேஜும் சக்சஸ் ஆகல.. காரணம் மூணாவது பாய் ஃப்ரெண்டாம்.. என்ன லிஸ்ட் பெருசா போகுது?

  |

  சென்னை: ஆரம்பத்தில் இருந்தே அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்த அந்த கவர்சி நடிகையை, பட்டி டிங்கரிங் பார்த்து, ஒழுங்கா இருப்பாங்கன்னு நினைச்சு அந்த இயக்குநர் தாலி கட்டினார்.

  ஆனால், இயக்குநர் இயக்க வேலைகளில் பிசியாக இருக்கும் போது, இந்த கவர்ச்சி நடிகை, சரக்கு, பார்ட்டி என ஜல்சா செய்வது மட்டுமின்றி, பிரபல நடிகர்களின் ஃபேவர்களையும் பூர்த்தி செய்து வந்துள்ளாராம்.

  ஒன்னு தான் டைவர்ஸ் ஆகிடுச்சுன்னு, அடுத்த கல்யாணம் பண்ணா, மூனாவதை தேடி, அந்த பாடகரையும் பரிதவிக்க விட்டு விட்டாராம்.

  பாவம் பாடகர்

  பாவம் பாடகர்

  காதலிக்கும் போதே, கல்யாணம் எல்லாம் செட் ஆகாது, லிவ்வின்னில் இருக்கலாம் என்ற கண்டிஷன் போட்டே, அந்த கவர்ச்சி நடிகை ஜாலியாக இருக்க சம்மதித்துள்ளார். ஆனால், குடும்ப பிரெஷர் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, சிம்பிளா, ரகசியமா திருமணம் முடித்துக் கொள்வோம் என பாடகர் கெஞ்சியுள்ளார்.

  கண்டிஷன் கல்யாணம்

  கண்டிஷன் கல்யாணம்

  ஓகே கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஆனால், வெளியே ஒரு மூச்சும் விடக்கூடாது, நான் என் இஷ்டத்துக்குத் தான் இருப்பேன். நீ எதையும் கேட்கக் கூடாது, அப்படி ஏதாவது கேட்ட, அப்பவே விட்டுட்டு போய்டுவேன் என அந்த கவர்ச்சி நடிகை கண்டிஷன் போட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டதால், அந்த பாடகர் வாயே திறக்க வில்லையாம்.

  பிரேக்கப் அப்

  பிரேக்கப் அப்

  கல்யாணத்துக்கு பின்னர் தான் ஏன் டா கட்டிக்கிட்டோமுன்னு அவர் ரொம்ப ஃபீல் பண்ணியிருக்காரு.. ஓவர் டாமினேஷன், இஷ்டத்துக்கும், குடியும் கூத்தும் என இருந்துள்ளார். இப்படியொரு பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு வெளியே சொல்லாமல் இருக்க முடியாத அந்த பாடகர், ரகசியமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியே கசியவிட்டுள்ளார்.

  நடிகைக்கு கோபம்

  நடிகைக்கு கோபம்

  தனது அனுமதியின்றி, எப்படி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை கசிய விடுவாய் என பயங்கர கோபத்துடன், அந்த பாவப்பட்ட ஜென்மத்தை விளாசியுள்ளார் அந்த கவர்ச்சி நடிகை. பதிலுக்கு, அவரும், உன் இஷ்டத்துக்கு இருக்கிறதுக்கு இதெல்லாம் சத்திரம் கிடையாது, கொஞ்சமாவது பார்த்து நட, முதல் முறையாக பதிலுக்கு கோபப்பட, நடிகை கம்பியை நீட்டியுள்ளாராம்.

  மூன்றாவது பாய் பிரெண்ட்

  மூன்றாவது பாய் பிரெண்ட்

  ஆனால், சமூக வலைதளங்களில் கசிந்த பதிவுகள் உண்மையிலேயே காரணம் இல்லை என்றும், பாலிவுட் நடிகர் ஒருவருடன் சமீபத்தில் ஏற்பட்ட புதிய காதல் தான், அந்த பாட்டு வாத்தியார் கிட்ட இருந்து, அந்த பறவை பறந்து சென்றதற்கு காரணம் என்றும், பரபரப்பாக பாலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  இயக்குநர் ஹேப்பி

  இயக்குநர் ஹேப்பி

  தனது வாழ்க்கையை நாசம் செய்து விட்டு, சென்ற அந்த கவர்ச்சி நடிகையின் இரண்டாவது கல்யாணமும் இவ்வளவு சீக்கிரத்தில் தோல்வியில் முடிந்த நிலையில், அவ கூட யாரும் வாழ முடியாது, நல்லா வேணும் அவனுக்கு, புதுசா மாட்டியிருக்கிற பலி ஆடு யாருன்னு தெரியல.. தெரிஞ்சா அவனையாவது உஷாரா இருக்க சொல்வோம் என செம ஹேப்பியில் இருக்கிறாராம் அந்த இயக்குநர்.

  English summary
  Glamour actress who acts fully nude in her last movie, recently tie the knot with a bollywood celebrity. Now the actress second marriage also came to an end because of her third boy friend.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X