சைடு வருமானத்தை நம்பி அந்த பிசினஸில் இறங்கிய நடிகை.. கடைசியில இப்படி வசமா சிக்கிட்டாரே!

By Staff

சென்னை: சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அந்த பேபி நடிகை திடீரென ஏகப்பட்ட சைடு பிசினஸை நம்பி இறங்கியுள்ளதாக கூறுகின்றனர். சீக்கிரமே அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நடிகை முன் பின் தெரியாத சில நபர்களிடம் மாட்டி தவித்து வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

ரசிகர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் பற்றியெல்லாம் அந்த நடிகை இதுவரை எப்போதுமே கண்டுக் கொண்டதே இல்லை என்றும் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்கிற புத்தியுடன் தான் செயல்பட்டு வருகிறார் எனக் கூறுகின்றனர்.

gossip kollywood


சமீபத்தில், நடிகை பல கோடி மதிப்புள்ள டீலிங்கில் ஈடுபட்டு வருவது குறித்து அறிந்த பிரபலம், நடிகை சொல்வதெல்லாம் சுத்த பொய் என அடித்து நொறுக்கி அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது நடிகையை ரொம்பவே அதிர்ச்சியில் ஆக்கி விட்டதாம்.

எல்லாமே ஏடாகூடம்: அந்த பேபி நடிகை ஆரம்பத்தில் இருந்தே எல்லாத்தையுமே ஏடாகூடமாக செய்து வந்த நிலையில், தான் அவரை விட்டு அவரது கணவர் விலகி விட்டதாக கூறுகின்றனர். யார் சொல்பேச்சும் கேட்காமல் தனக்கு தோன்றியது மட்டுமே சரி என கண்ணை மூடிக் கொண்டு அந்த விஷயங்களை மட்டுமே செய்து வருவார் என்றும் யாருமே அவரிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

தப்பான பிசினஸ்: சினிமா வாய்ப்புகள் திடீரென நடிகைக்கு குறைந்து விட்ட நிலையில், அதிகம் சம்பாத்தியம் வரக்கூடிய பிசினஸில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம் அந்த நடிகை. எதெல்லாம் இயற்கைக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய விஷயமோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற கொள்கையுடன் பல தப்பான பிசினஸ்களில் தலையை விட்டுக் கொண்டு மாட்டி முழித்து வருகிறார் அந்த நடிகை என பஞ்சாயத்துகள் வெடித்து வருகின்றன.

தவறான வழிகாட்டி: நடிகையுடன் தற்போது நெருக்கமாக இருக்கும் நபர் தான் இப்படி நடிகையை தவறான பாதையில் வழிகாட்டி செல்கிறார் என்றும் விரைவிலேயே நடிகை விழித்துக் கொண்டு சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டும் என நடிகையின் நண்பர்களும், முன்னாள் கணவரும் கூட சமீபத்தில் அட்வைஸ் செய்துள்ளனர் என்றும் ஆனால், அதையெல்லாம் இப்போதைக்கு கேட்க முடியாத நிலையில், அவர் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X