புத்தாண்டு பார்ட்டியில் ஃபுல் போதை.. வாரிசு நடிகருடன் பேபி நடிகை போட்ட கெட்ட ஆட்டம்.. செம ஷாக்!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாலிவுட்டில் உச்சகட்டத்தில் இருந்த நிலையில், சமீபத்தில் பிரேக்கப் ஆன அந்த வாரிசு நடிகர் பேபி நடிகையுடன் போட்ட ஆட்டத்தை பார்த்து திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் கிடப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த வருடம் நடிகை மீண்டும் நடிக்க ரெடி என்று சொல்லி தனது பிறந்தநாளில் பெயருக்கு ஒரு டம்மி பட போஸ்டர் அறிவிப்பையும் வெளியிட்டு பார்த்தார். ஆனால், அதன் பின்னரும் நடிகைக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில், மில்க் நடிகை போல தானும் சீக்கிரமே ஒருவரை பிக்கப் செய்து செட்டில் ஆக வேண்டும் என்கிற அவசரத்தில் நடிகை இருக்கிறாராம்.

இதுதான் சான்ஸ் என வாரிசு நடிகர் வயதான நடிகையை கழட்டிவிட்டு கடந்த சில மாதங்களாக பேபி நடிகையுடன் நட்பை தாண்டிய உறவில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
குடும்பத்துக்கு செட்டாகல: நடிகை ஓவராட்டம் போட்டுக் கொண்டு சினிமாவில் அடுத்த எல்லையை நோக்கி நகர போகிறேன் என பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், நடிகையின் நடவடிக்கைகள் எதுவுமே அந்த பெரிய குடும்பத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். பெரியவர்களின் பேச்சை எல்லாம் கேட்க முடியாது என நடிகை அடம்பிடித்துக் கொண்டிருக்க பெற்றோர்களின் பேச்சைக் கேட்காத பெண் தனக்கு மனைவியாக இருக்க வேண்டாம் என அந்த நடிகர் விவாகரத்து அறிவிப்பையே வெளியிட்டு நடிகையை பயங்கர சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வாரிசு நடிகருடன் காதல்: தனது கணவர் இன்னொரு நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தான் மட்டும் ஏன் அவரையே நினைத்து வேதனைப்பட்டு சாக வேண்டும் என நினைத்த நடிகை அதிரடியாக அந்த வாரிசு நடிகருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரையே காதலிக்கத் தொடங்கிவிட்டார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
நியூ இயர் பார்ட்டியில் எல்லை மீறல்: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடந்த மிட் நைட் பார்ட்டியில் ஓவர் போதையான நடிகை திரும்ப வீட்டுக்குப் போகாமல் நடிகருடனே ஹோட்டல் ரூமுக்கு சென்று விட்டார் என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. பாலிவுட்டில் சீக்கிரமே அடுத்த திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே கூறுகின்றனர். அந்த நடிகைக்கு மீண்டும் காதல் வரக்கூடாதா? அவர் மீது என்ன தவறு இருக்கு என்றும் அவரது ரசிகர்கள் முட்டுக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











