கல்யாணம்லாம் இப்போதைக்கு இல்லையாம்.. எல்லாமே அந்த நடிகர் கொளுத்திப் போட்ட திரியாம்!
சென்னை: அந்த ஓவர் ஆக்டிங் நடிகைக்கு விரைவில் கல்யாணம் ஆகப் போவதாக வந்த தகவல்கள் முற்றிலும் வதந்தி என்ற விஷயம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க கத்துகிட்டு, பிரபலமாகி வரும் அந்த நடிகையின் மார்க்கெட்டை டோட்டலாக காலி செய்ய நடிகர் ஒருவர் கொளுத்திப் போட்ட வேலை தான் இதற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

ஓவர் ஆக்டிங்
50 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 5 லட்சத்துக்கு நடிக்கும் அந்த ஓவர் ஆக்டிங் நடிகை நடிப்பில் வெளியான பல படங்கள் ஃப்ளாப் ஆகி தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தின. தெரிந்தோ தெரியாமலோ, இயக்குநரின் அற்புத உழைப்பால் அந்த ஒரு படம் மட்டும் ஹிட்டாக அம்மணியை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

நடிக்கவே வரல
விருதெல்லாம் வாங்கி இருக்காரே, ஒருவேள நல்லா நடிப்பாரோ என நம்பி அந்த பாலிவுட் படத்தில் நடிக்க அந்த ஓவர் ஆக்டிங் நடிகைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்துப் பார்த்தால், பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு இருந்ததாலும், நடிக்கவே வராததாலும், பாலிவுட் படத்தில் இருந்து உடனடியாக ஓரங்கட்டப்பட்டார் அந்த நடிகை.

தங்கச்சி ரோல்
உச்ச நடிகர் படத்தில் நடிக்க போறேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்த அந்த ஓவர் ஆக்டிங் நடிகைக்கு, கடைசியில் பார்த்தால், அவருக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்ற ரோல் தான் வழங்கப்பட்டுள்ளதாம். மேலும், அந்த படத்தில் லேட்டாக நம்பர் நடிகை இணைந்து இருப்பதால், இந்த அம்மணிக்கு மவுசும் இல்லையாம் மதிப்பும் இல்லையாம்.

கல்யாணம்
இந்நிலையில், சீக்கிரமே அந்த நடிகை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதுவும் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி ஒருவரை கல்யாணம் கட்டிக் கொள்ளப் போவதாகவும், செய்திகள் பரபரப்பாக வெளியாகின. பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு அந்த நடிகை ஓகே சொன்னதாக வந்த தகவல்கள் தற்போது மறுக்கப்பட்டுள்ளன.

கொளுத்திப் போட்ட நடிகர்
பிரபல பத்திரிகையாளரும், சினிமாவில் சில படங்களில் தலைக்காட்டி நடித்து வருபவருமான அந்த துணை நடிகர் கொளுத்திப் போட்டத் திரிதான் இந்த திருமண செய்தி என தற்போது தகவல் கிடைத்துள்ளன. தனது மகளின் திருமணம் குறித்த வதந்திகளை பெற்றோர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











