இப்போ தும்முனாதான் உண்டு.. எக்ஸ் கணவரை பழிவாங்க துடிக்கும் பேபி நடிகை.. மாமனாரும் மாட்டுவாரா?
சென்னை: தென்னிந்திய சினிமாவையே பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் உலுக்கி எடுத்து வருகின்றன. நமக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல பாலிவுட் அப்படியே பம்மிக் கொண்டிருக்கும் நிலையில், டோலிவுட்டில் இந்த பிரச்சனையை பூதாகரமாக்கி வருகிறார் அந்த பேபி நடிகை.
காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகையை இன்னொரு நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் கழட்டி விட்டு விட்டார் அந்த நடிகர் எனக் கூறுகின்றனர். நடிகரின் அப்பா இண்டஸ்ட்ரியிலேயே பெரிய கை என்பதால் நடிகை சைலன்ட்டாக பெரிதளவில் பஞ்சாயத்தைக் கூட்டாமல் இருந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இந்த முறை நடிகை கையில் பிரம்மாஸ்திரமே கிடைத்திருக்கும் நிலையில், தனது எக்ஸ் கணவரை மட்டுமின்றி கணவரின் அப்பாவுக்கும் சேர்த்து செக் வைக்கும் முடிவில் களமிறங்கியுள்ளதாக பகீர் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.
நடிகைகளுக்கு டார்ச்சர்: சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனது எக்ஸ் கணவர் நடிகைகளுக்கு எளிதில் வலை விரித்து அவர்களை அனுபவித்து வருவதை எல்லாம் பார்த்து சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தான் கணவரை பிரிந்து விட்டார் என்றே கூறுகின்றனர். தற்போது இந்த விவகாரத்தை அந்த இடத்தில் பெரிதளவில் ஊதிப் பெரிதாக்கினால் கணவருக்கும் கண்டிப்பாக சிக்கல் வரும் என்றும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டுத்தான் வாய் திறந்துள்ளார் அந்த நடிகை எனக் கூறுகின்றனர்.
மாமனாரும் மாட்டுவாரா?: உயரமான நடிகையை சினிமாவில் கொண்டு வர ஏகப்பட்ட சித்து வேலைகளை நடிகையின் மாமனாரே செய்துள்ளதாக பேச்சுக்கள் ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வரும் நிலையில், அந்த நடிகை மட்டும் இந்த விவகாரத்தில் வாய் திறந்தால் கணவர் மட்டுமல்ல மாமனாரும் சேர்ந்து மாட்டுவார் எனக் கூறுகின்றனர்.
காஸ்டிங் கோச்: பெரிய சினிமா நிறுவனத்தையே நடத்தி வரும் எக்ஸ் கணவரும் மாமனாரும் சேர்ந்து பட வாய்ப்பு தருவதாக பல பெண்களை ஏமாற்றியிருக்கக் கூடும் என்றும் அதில், யாராவது ஒருவர் சிக்கினால் கூட இந்த விவகாரத்தை பெரிதாக்கி விடலாம் என்கிற முனைப்புடன் வலை வீசி தேடி வருகிறாராம் அந்த பேபி நடிகை என டோலிவுட்டில் பரபரப்பான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
பழிவாங்கும் படலம்: தனது வாழ்க்கை இந்த நிலைமைக்கு மோசமாக போன நிலையில், அதற்கெல்லாம் காரணமானவர்கள் ஜாலியாக இருப்பது எப்படி என்கிற வெறியில் நடிகை தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து இருப்பதாகவும் கூடிய சீக்கிரமே வெடிகுண்டு வெடிக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











