ஆசைக்காட்டி மோசம் செய்த டாப் நடிகர்.. மன வேதனையில் இயக்குநர்.. மனைவி செய்த அதிரடி செயல்?

By Staff

சென்னை: சுதந்திரம் கொடுத்தாரு, சுதந்திரம் கொடுத்தாருன்னு சொல்லிட்டு திரிஞ்ச கிளியை கடைசியா சுதந்திரமாவே பறக்க விட்டுட்டாரே டாப் நடிகர் என ஊரே கேலி கிண்டல் செய்து வரும் நிலையில், கடுமையான மன வேதனைக்கு அந்த இயக்குநர் தள்ளப்பட்டுள்ளது மனைவியை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாம்.

இயக்குநருக்கு சொந்த கம்பெனி வைத்துக் கொடுத்து படங்களை தயாரித்து வரும் மனைவி நஷ்டத்தை ஈடு கட்ட பெரிய நிறுவனத்துடன் ஒரு படத்தை கணவரை இயக்க வைக்கலாம் என முழு முயற்சியில் ஈடுபட்டு பல விஷயங்கள் செய்து வாய்ப்பை பெற்ற நிலையில், கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளாராம்.

நடிகர் கடைசி வரை அப்படியொரு முடிவை எடுக்க மாட்டார் என ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்து வந்த நிலையில், எல்லாமே தலை கீழாக மாறிய நிலையில், அதிரடியாக அப்படியொரு முடிவை நடிகை எடுத்து விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆசைக்காட்டி மோசம்

ஆசைக்காட்டி மோசம்

நீங்க வித்தியாசமா ஜாலியா படம் பண்றீங்க, வாங்க நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என அந்த இயக்குநரை நடிகர் அழைத்து கதை கேட்க இயக்குநரும் தனக்கு பிடித்த நடிகருக்கு பெரிய படம் பண்ணப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தனக்கு தெரிந்த பாணியில் ஒரு ஜாலியான கதையை உருவாக்கி கொடுத்திருக்கிறார். நடிகருக்கும் ஆரம்பத்தில் அந்த கதை பிடித்துப் போகவே ஓகே சொல்ல அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

போட்டியில் விழுந்த அடி

போட்டியில் விழுந்த அடி

ஆனால், சமீபத்தில் போட்டி நடிகருடன் போட்டி போட்டு தனது பலத்தை காட்ட நினைத்து தோல்வியடைந்த டாப் நடிகர் அடுத்த படத்திலாவது கடும் சவாலாக மாற வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையில் கடைசி நேரத்தில் இயக்குநரிடம் கதையையே மாற்ற சொல்லியதால் தான் இந்த வினையே வந்ததாம்.

விருப்பமின்றி ஒரு கதை

விருப்பமின்றி ஒரு கதை

இயக்குநரும் டாப் நடிகரின் பேச்சுக்கு மறு பேச்சு சொல்ல முடியாமல் பழைய ஆக்‌ஷன் படங்களின் கதைகளை பட்டி டிக்கெரிங் பார்த்து அந்த காப்பி இயக்குநர் பாணியில் ஒரு கதையை கிண்டி கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அதை தனது டீமிடம் படிக்கக் கொடுத்ததுமே ஆளாளுக்கு இந்த சீன் அந்த படத்தில் இருந்து எடுத்தது. இந்த சீன் இந்த படத்தில் இருந்து சுட்டது என புட்டு புட்டு வைக்க நடிகர் கடுப்பாகி விட்டாராம்.

தயாரிப்பாளரை கவுக்க

தயாரிப்பாளரை கவுக்க

நடிகருக்கு பிடிக்கலைன்னா என்ன? நாம டைரக்ட்டா தயாரிப்பாளர் கிட்ட இதே கதையை சொல்லி ஓகே வாங்கி விட்டால் நடிகர் சைலன்ட்டா வந்து நடிக்கப் போறாருன்னு நினைச்சிட்டு, தயாரிப்பாளரை பார்க்க கடல் கடந்து பறந்து போயிருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த தகவல் டாப் நடிகர் காதுக்கு எட்டியதும் இயக்குநரை மாற்றினால் நான் நடிக்கிறேன் என ஒரே போடாக அந்த நடிகர் சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.

கதறி அழுத கணவர்

கதறி அழுத கணவர்

எதிர்பார்த்த படத்தை இயக்க முடியாமல் போயிடுச்சே, மனைவி வாங்கிக் கொடுத்த வாய்ப்பை தவற விட்டுட்டோமே என்ன செய்வது என நினைத்த இயக்குநர் கதறி அழுவது போல மனைவியிடம் டிராமா போட, அந்த படம் போனா போதுங்க நம்ம தயாரிப்பு நிறுவனத்துல இன்னொரு படம் பண்ணுங்க கவலைப்படாதீங்க பேபின்னு தேற்றி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகையின் அதிரடி முடிவு

நடிகையின் அதிரடி முடிவு

மேலும், கணவரை துரத்தி விட்ட நிறுவனம் மற்றும் கழட்டிவிட்ட நடிகருடன் இனிமேல் இணைந்து எந்தவொரு படமும் பண்ணப் போவதில்லை என்கிற முடிவுக்கே நடிகை வந்து விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கம் முழுவதும் பற்றி எரிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X