நம்பர் நடிகையின் சில்மிஷத்தை பார்த்தீங்களா?.. மாஸ் நடிகரின் திருமண நாளில் என்ன பண்ணாரு பாருங்க!
சென்னை: மாஸ் நடிகரின் திருமண நாள் அதுவுமா அவரது மனைவியை வெறுப்பேற்றும் விதமாக சின்ன நம்பர் நடிகை அப்படியொரு வேலையை பார்த்துள்ளார் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
திருமண நாளிலும் நடிகர் அந்த நடிகையுடன் தான் இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அப்படியொரு காரியத்தை அந்த நடிகை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

வெளிநாட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்காமல் அந்த நடிகையுடன் தான் நடிகர் டூர் அடித்து வருவதாக கூறுவது எல்லாம் உண்மையாகிவிடும் போல இருக்கே என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு எழுந்துள்ளது.
நடிகைகளுடன் நேரத்தை செலவழிக்கும் நடிகர்: மாஸ் நடிகர் ஒட்டுமொத்தமாகவே தனது குடும்பத்தையே பிரிந்து சமீப காலமாக நடிகைகளுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக பல விதமான கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ஏற்கனவே விருது நடிகையுடன் உறவில் இருந்து வந்த நடிகர் தற்போது சின்ன நம்பர் நடிகையுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டில் ஜாலி: மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகர் இருந்து வந்தால், இந்நேரம் போட்டோ ஒன்றை வெளியிட்டு தேவையில்லாத வதந்திகளுக்கு எப்பவோ முற்றுப்புள்ளி வைத்திருப்பார் என்றும் நடிகர் நலத்திட்டங்களை செய்தாலும், அது அவரது அரசியல் ஆதாயத்துக்கான விஷயம் என்பதாலே மனைவி மற்றும் குழந்தைகள் நடிகர் பக்கமே செல்லவில்லை என்கின்றனர்.
இதன் காரணமாக குடும்பத்தை விட்டு விட்டு நடிகைகளுடன் வெளிநாட்டில் அந்த நடிகர் ஜாலியாக ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.
சின்ன நம்பர் நடிகையின் சில்மிஷம்: நடிகரின் திருமண நாளிலாவது ஒரு ஃபேமிலி போட்டோவாக வெளியாகி நடிகர் பற்றி கிளம்பியுள்ள பூதத்தை அடக்குவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி வரை நடிகர் ஏமாற்றத்தையே அளித்தார்.
இந்நிலையில், சின்ன நம்பர் நடிகை வேண்டுமென்றே அந்த மாஸ் நடிகர் எடுத்த போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து நடிகரின் மனைவியை வெறுப்பேற்றியுள்ளார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. நடிகரின் சினிமா விழாவுக்கு கூட அவரது மனைவி வரமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது என்கின்றனர். முன்னதாக நடைபெற்ற சினிமா விழாவிலும் அவரது மனைவி பங்கேற்காமல் போனதற்கு காரணமும் இருவருக்கும் இடையே உண்மையாகவே பிரச்சனை உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











