கணவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த போராடும் நம்பர் நடிகை.. சிக்கப் போறது அந்த நடிகரா?
சென்னை: வம்பு நடிகர் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அந்த அன்பான இயக்குநர் எப்போது நம்பர் நடிகையை இயக்க ஆரம்பித்தாரோ அதிலிருந்து அவருக்கு அதிர்ஷ்ட தேவதை கூடவே குடி கொண்டது போல வாழ்க்கையே வேறலெவலில் மாறியது.
ஆனால், அதே நேரம் திருமணத்திற்கு பிறகு யார் கண் வைத்தார்களோ டாப் நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பே கைக்கு எட்டிய நிலையில், வாய்க்கு எட்டாதபடி ஆகிவிட்டது.
இந்நிலையில், கணவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கித் தர நம்பர் நடிகை முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த இயக்குநர்
அந்த காப்பி இயக்குநர் இயக்கத்தில் நம்பர் நடிகை பெரிய நடிகர் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். கோலிவுட்டில் கிட்டத்தட்ட நம்பர் நடிகையை ஓரங்கட்டிய நிலையில், மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி தனது மார்கெட்டை தனியாக உயர்த்தி வருகிறார். இந்நிலையில், கணவருக்காகவும் தீவிரமாக பட வாய்ப்புகளை தேடுவதில் கவனம் செலுத்தி வருகிறாராம் நம்பர் நடிகை.

பறிபோன வாய்ப்பு
நம்பர் நடிகை தயவால் தான் அந்த டாப் நடிகரின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பே அந்த பெரிய நிறுவனத்துக்கு கிடைத்தது என பேச்சுக்கள் அடிபட்டன. மேலும், தனது கணவருக்கு அந்த பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் தான் பல டீலிங் பேசி முடித்துக் கொடுத்தார். ஆனால், கடைசி நேரத்தில் மனைவி மூலம் கிடைத்த வாய்ப்பையே தவறவிட்டு விட்டார் அந்த இயக்குநர்.

உறவினர் சாபம்
நடிகைக்கும் இயக்குநருக்கும் சமீப காலமாக நேரம் சரியாக இல்லாததற்கு காரணமே உறவினர் ஒருவரின் சாபம் தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் அதற்கான பரிகாரங்களையும் நம்பர் நடிகை செய்ததாக கூறப்படுகிறது. எந்தவொரு பிரச்சனை வந்தாலும், அதனை எளிதில் சமாளித்து விட்டு சோதனையை சாதனையாக்கும் வழியை கண்டறிவதில் கெட்டிக்காரியான நம்பர் நடிகை அடுத்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் பக்கம்
கோலிவுட்டில் டாப் நடிகரின் படம் கணவரின் கை விட்டுப் போன நிலையில், காப்பி இயக்குநர் எப்படி பாலிவுட்டில் படத்தை இயக்கி வருகிறாரோ அதே போல தனது கணவரையும் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகப்படுத்த முடிவு செய்து தனது கையோடு அவரையும் இந்த நெகட்டிவிட்டியில் இருக்க வேண்டாம் வாங்க என கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இளம் நடிகரை இயக்கும் வாய்ப்பு
பாலிவுட்டில் தனது கணவர் இயக்கிய படங்களை போட்டுக் காட்டிய நிலையில், இளம் பாலிவுட் நடிகருக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டதாம். நேரில் சந்தித்து அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்க அழைத்ததன் பேரில் தான் தற்போது கிளம்பிச் சென்றிருக்கிறார் என்றும் கூடிய விரைவிலேயே சூப்பர் அறிவிப்பை நம்பர் நடிகையின் கணவர் செம ஹேப்பியாக வெளியிட்டு தன்னை உதாசினப்படுத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.

மனைவியின் முயற்சி
கணவரை சரியான இடத்தில் கொண்டு சென்றால் போதும், அவருக்கு இருக்குற டேலன்ட்டை வைத்து பிக்கப் செய்து விடுவார் என இந்த முறை பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல ஏகப்பட்ட முயற்சிகளை மனைவி அக்கறையுடன் செய்து வருவதை அறிந்து வாய்ப்பை தவற விடக் கூடாது என வெறித்தனமாக கணவரும் களமிறங்கி உள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











