காப்பி இயக்குநருக்கு ஐஸ் வைக்கும் சமத்து நடிகை.. நம்பர் நடிகையை ஓரங்கட்ட பலே திட்டம்!

சென்னை: தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அந்த நம்பர் நடிகையை ஓரங்கட்ட சமத்து நடிகை பக்காவாக பிளான் போட்டு வருகிறாராம்.

காப்பி இயக்குநர் இயக்க உள்ள உச்ச நடிகரின் படத்தில் நடிக்க அந்த நடிகைக்கு பதில் தன் பெயரை சிபாரிசு செய்யுமாறு தனியாக அழைத்து ஐஸ் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே கணவரும் மனைவியும் வட இந்தியாவுக்கு மூட்டை கட்டியிருக்கும் நிலையில், அந்த படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது தான் சமத்து நடிகையின் ஒரே குறிக்கோளாக இருக்கிறதாம்.

பாலிவுட்டில் பிரபலம்

பாலிவுட்டில் பிரபலம்

தென்னிந்தியாவில் தொடர் ஃபிளாப்புகளை சந்தித்து வந்த அந்த சமத்து நடிகை, இனிமே நம்ம ஆட்டம் இங்கே செல்லாது. நைசாக பாலிவுட் பக்கம் போய் ஏமாற்றலாம் என கிளம்பி விட்டார். சமீபத்தில் வெளியான ஒடிடி படைப்பு ஒன்றிலும் அவருக்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் ரீச் கிடைக்க இனிமே அங்கேயே கடையை விரித்து விடலாம் என திட்டமிட்டு இருக்கிறாராம்.

குடும்பத்தோட செட்டில்

குடும்பத்தோட செட்டில்

நம்ம மட்டும் தனியா பாலிவுட்டில் வீடு வாங்கி தங்கினா புகுந்த வீடு பொளந்து விடும் என்பதற்காக புருஷனுக்கும் பாலிவுட்டில் ஒரு வாய்ப்பை வாங்கி கொடுத்து வட இந்தியாவிலேயே புதிதாக ஒரு வீட்டையும் வாங்கி செட்டில் ஆகி விட்டாராம்.

காப்பி இயக்குநருக்கு ஐஸ்

காப்பி இயக்குநருக்கு ஐஸ்

காப்பி இயக்குநர் இயக்கத்தில் உச்ச நடிகர் நடிக்கும் படத்திற்கு நம்பர் நடிகையை அவர் தேர்வு செய்து வைத்துள்ள நிலையில், ஏற்கனவே அந்த இயக்குநருடன் செல்ஃபி எடுத்து நடித்த சமத்து நடிகை அந்த வாய்ப்பை எனக்கு கொடுங்க, எனக்கு இப்போ இங்கே நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க என நல்லா ஐஸ் வைத்துள்ளாராம்.

குடும்பத்தில் சிக்கல்

குடும்பத்தில் சிக்கல்

நம்பர் நடிகைக்கும் குடும்பத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதையும் காரணமாக காட்டி அவர் இப்போதைக்கு ஓகே சொல்லமாட்டார். நான் ரெடியாக இருக்கேன். நீங்க தான் என்னை அந்த ஹீரோ படத்தில் ஓகே பண்ணனும் என ஒரே போடாக போட்டுள்ளாராம்.

நம்பர் நடிகையை ஓரங்கட்ட

நம்பர் நடிகையை ஓரங்கட்ட

ஏற்கனவே ஒடிடி படைப்பு மூலம் உள்ளூரை தவிர இந்தியளவில் தனது புகழை உயர்த்தி விட்ட சமத்து நடிகை அந்த பாலிவுட் படத்தையும் பிடித்து விட்டால், மார்கெட் ரீதியாக எளிதில் நம்பர் நடிகையை பின்னுக்கு தள்ளிவிட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என பலே திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தாலும் நல்லா நடிக்கணுமேன்னு ஒரே பேச்சா பேசிக்கிறாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X