எதுவுமே செட் ஆகல.. அந்த இயக்குநர் வந்த ராசி தான்.. அதிரடியாக முடிவெடுத்த பிரபல நடிகை?

By Staff

சென்னை: பிரபல நடிகை எதிர்பார்த்த அந்த பெரிய படமும் அவரது கையை விட்டுப் போன நிலையில், பயங்கர அப்செட் ஆகி விட்டார் என்கின்றனர். பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குநரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தொடர்ந்து எல்லாவற்றிலும் தோல்வியை தழுவி வருகிறாராம் நடிகை.

தொழிலில் ஈடுபட்டால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என நினைத்த அவருக்கு அங்கேயும் சொல்லிக் கொள்ளும் படி எந்த தொழிலிலும் வெற்றிக் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

Popular actress upset over her husband and ready for separation gossip shocks kollywood

இந்நிலையில், அனைத்துக்கும் காரணம் அந்த இயக்குநருடன் சேர்ந்த ராசி தான் என ஜோசியர் ஒருவர் சொன்னதை கேட்டதில் இருந்தே என்ன முடிவை எடுக்கலாம் என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகை என பகீர் கிளப்புகின்றனர்.

கணவர் பிஸி: நடிகைக்கு பெரிதாக படங்கள் கை வசம் இல்லாத நிலையில், புதிதாக கிடைத்த பட வாய்ப்பை எப்படியாவது பிடித்துக் கொண்டு தனது திறமையை நிரூபித்தே தீர வேண்டும் என கணவர் மனைவியுடன் பேசுவதை கூட தவிர்த்து விட்டு தொடர்ந்து உழைத்து வருகிறாராம். எப்போதுமே தன்னுடன் கூட வரும் கணவர் விருது வாங்கும் போது கூட உடன் வராதது நடிகைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர்.

நடிகையுடன் நெருக்கம்: மேலும், சிலர் புதிதாக வந்த யங் நடிகையுடன் இயக்குநர் காதலில் விழுந்து விட்டார் என்றும் பிரபல நடிகையிடம் பற்ற வைத்து விட்டனர் சிலர், அதனால் தான் நடிகை கணவருடன் பேசுவதை நிறுத்தி விட்டு திருமண உறவையே தூக்கிப் போட்டு விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டார் என்றும் பற்ற வைத்துள்ளனர். அதன் காரணமாகவே நடிகை கணவருக்கு வார்னிங் மெசேஜ் கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

பெரிய பட வாய்ப்பு போச்சு: ஆனால், அதெல்லாம் இல்லை என்றும் நடிகை ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த பெரிய பட வாய்ப்பு இன்னொரு ஹீரோயின் வசம் தற்போது சென்று விட்டதால் தான் அம்மணி ரொம்பவே டென்ஷனாகி விட்டார் என்றும் கூறுகின்றனர். திருமணம் ஆகாத வரை நம்பர் ஒன்னாக இருந்த நடிகை இப்போ பலரும் கிண்டல் செய்யும் நிலைக்கு செல்ல காரணமே திருமணம் தான் என நினைத்து அந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்கிற மனநிலைக்கே அவர் வந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X