தொடரும் ஏழரை.. நம்பர் நடிகையின் பிசினஸ் எதுவுமே பிக்கப் ஆகலையாம்.. அதுதான் காரணமா?
சென்னை: நம்பர் நடிகை தொடர்ந்து பல பிசினஸ்களை தொடங்குவதன் நோக்கமே ஒரு பிசினஸிலும் அவருக்கு நிலையான வளர்ச்சி கிடைக்காதது தான் என்கின்றனர். கோலிவுட் பக்கம் நடிகையை மொத்தமாக மூட்டைக் கட்டிய நிலையில், சோலோ ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
எந்தவொரு பெரிய ஹீரோவும் திருமணத்திற்கு பிறகு நம்பர் நடிகையை சீண்டவே மாட்டோம் என ஒதுக்கி வரும் நிலையில், மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும், கணவர் ரொம்பவே பயப்படுவதால் அதையெல்லாம் தவிர்த்து விட்டு பிசினஸ் உமனாக மாற முடிவு செய்திருக்கிறார்.

ஆனால், நடிகை எதிர்பார்த்த அளவுக்கு அவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு தொழிலும் லாபம் தரவில்லை என்பதால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகியிருப்பதாக கூறுகின்றனர்.
படங்கள் ஓடல: பெயர் மற்றும் பட்டத்தை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டாலும் சோலோவாக நம்பர் நடிகை நடித்த கடந்த அரை டஜன் படங்கள் அடுத்தடுத்து ஃபிளாப் ஆன நிலையிலும், சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நடிகையை நம்பி படம் எடுக்க முன் வருகின்றனர். ஆனால், நடிகைக்குத் தனது படங்கள் ஓடவில்லையே என்கிற வருத்தம் அதிகமாகவே ஏற்படுவதால் படங்களையும் கதைகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் என்கின்றனர்.
பிசினஸ் மீது ஆசை: இத்தனை ஆண்டுகள் சினிமாவில் ஸ்டார் ஆனதே பெரிய விஷயம் என நினைத்த நடிகை வெளிநாட்டில் நடிகைகள் எல்லாம் பிசினஸில் பெரிதாக சாதிப்பது போல தானும் சாதிக்க வேண்டும் என்கிற நினைப்பில் அடுத்தடுத்து பல தொழில்களை ஆரம்பித்து வருகிறார்.
வேலைக்கு ஆகல: ஆனால், அதில் எந்தவொரு பிசினஸும் சூடு பிடிக்கவில்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. நடிகை சம்பாதித்த சம்பாதியத்தை எல்லாம் இப்படி நடிகையை பிசினஸ் பக்கம் திருப்பி விட்டு காலி செய்து வருவதே அவரது கணவர் தான் என்றும் நடிகை தொடர்ந்து நடிக்க பிடிக்காத நிலையில் தான் அவரை டோட்டலாக மாற்ற அவர் போராடி வந்தாலும், எந்தவொரு பிசினஸும் லாபம் தராத நிலையில், நடிகை டென்ஷன் ஆகி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











