ஐட்டம் டான்ஸருக்கு ஸ்பெஷல் சம்பளம்.. எனக்கு இவ்வளவு தானா.. கடுப்பான பிரபல நடிகை!

By Staff

சென்னை: பொதுவாகவே அந்த ப்ரியமான நடிகை சம்பள விவகாரத்தில் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் தான் இருந்து வந்தார். ஆனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவருக்கு அதிக சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் தூக்கிக் கொடுத்ததை அறிந்ததும் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரொம்பவே கடுப்பாகி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையேயான சம்பள வித்தியாசம் பல மடங்கு அதிகமாக இருந்தாலும், நடிகைகள் அந்த விஷயத்தில் வாயே திறக்க மாட்டார்கள்.

ஏனென்றால், படம் ஓடுவதற்கான மைலேஜ் மற்றும் எந்த நடிகரை பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் வருகின்றனர் என்பதை பொறுத்துத் தான் சினிமாவில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது என்கிற அடிப்படை அறிவு அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ரொம்ப தங்கமானவர்

ரொம்ப தங்கமானவர்

ப்ரியமான நடிகை பல்வேறு கிசுகிசுக்களில் சிக்கினாலும் அது எல்லாமே பொய்யான தகவல்கள் என நிரூபித்து விட்டு எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் தனது வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு செயல் அந்த ப்ரியமான நடிகையையும் கோபப்படுத்தி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஆத்திரம்

நடிகை ஆத்திரம்

நீண்ட நாட்களாக உருவாகி வரும் படத்திற்காக ரொம்பவே பொறுமையுடன் காத்திருந்து வந்த அந்த நடிகை சமீபத்தில் கேள்விப்பட்ட அந்த சம்பள விஷயம் காரணமாக லேசாக டென்ஷனாக இருப்பதாகவும், அவர் கூட இருப்பவர்கள் இந்த விஷ்யத்தை தூண்டி விட்ட நிலையில் தான் நடிகை ஆத்திரம் அடைந்தார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சம்பள பிரச்சனை

சம்பள பிரச்சனை

படத்தில் ஹீரோயினாக நடித்த இந்த நடிகையை விட ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய அந்த நடிகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்திருப்பதாக கிளம்பிய பூகம்பத்தால் தான் தற்போது சுனாமியாக மாறி சுழன்று அடித்து வருகிறாராம் அந்த பிரியமான நடிகை. கேட்டால் தான் ஏதாவது கிடைக்கும் என நடிகைக்கு ரொம்பவே நெருக்கமானவர் தூண்டி விட நடிகை தயாரிப்பாளரிடம் இயக்குநரிடமும் தனக்கான அங்கீகாரத்திற்காக தாண்டவமாடி உள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகை சமாதானம்

நடிகை சமாதானம்

இந்த கடுப்பை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே நடிகை லேசாக வெளிப்படுத்தி படக்குழுவுக்கு பகீர் கிளப்பிய நிலையில், நடிகையை இந்த விஷயத்தில் ஆத்திரப்படுத்தாதீங்க என ஹீரோ காதை கடித்த நிலையில், நடிகையை சமாதானம் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன. படம் ரிலீஸ் ஆகுற நிலையில், நடிகை ஏதாவது வெடி குண்டை வீசி விட்டால் மேலும், சிக்கல் ஆகிவிடும் என்பதால் இப்படியொரு சமாதான டீலிங்கை செய்து இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X